உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 10.pdf/263

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கட

238

மறைமலையம் 10

வாத பாவாய்,” என்ற ஒரு தனிச் செய்யுளே பற்றுக கோடாகப் பழஞ்சோற்றிற்கு விசிறி கொண்டு வீசச் சொன்னதும், பகலில் விளக்கேற்றச் சொன்னதும், நீர் முகந்து கொண்டிருக்கையில் விளித்துக் கைக்கயிற்றை விட்டுவரச் சொன்னதுமாகிய பல கதைகள் உலவுகின்றன.

இனி, அவர் நெய்து விற்கக் கொண்டுவந்த ஓராடையை விலைகேட்ட ஒரு பொடியன், 2 பணம் என்ற வுடன் பாதியாகக் கிழித்து விலை கேட்க ஒரு பணம் என்றதாகவும், அதையும் இரண்டாகக் கிழித்து விலை கேட்க அரைப்பணம் என்றதாகவும் ஒரு கதை அவர்தம் பொறுமையைக் காட்ட எழுந்துள்ளது. ஒரு நாள் ஒரு குறும்பன் அம்மையார் கையைப் பிடித்திழுத்ததாகவும், உடனே ஆசிரியர் அவனை ஓங்கி அறைந்ததாகவும், அடிபட்ட அவன் “இவ்வளவுதானா உமது பெற்றி?

66

“அகழ்வாரைத் தாங்கு நிலம்போலத் தம்மை ம இகழ்வார்ப் பொறுத்த றலை.’

(குறள் 151)

என்று நீர் கூறிய நீதி உமக்கன்றோ?" என்று கேட்டானாக,

66

“அறிவிலீ,

‘செய்தக்க வல்ல செயக்கெடுஞ் செய்தக்க செய்யாமை யானுங் கெடும்'.

(குறள் 466) என்பது ஓதிற்றிலையோ?" என மடக்கினார் என்றும் ஒரு கதையுண்டு. இன்னும் இத்தகைய கதைகள் பல கூறுவர். இவை யாவும் உண்மையோ, பொய்யோ என்று துணிந்து கூறுதற் கில்லை.

இனி, ஆசிரியரியற்றியவாக வழங்கும் சிறு நூல்கள்- சித்தர் நூல்கள், மருத்துவ நூல்கள், சோதிட நூல்கள்- அளவற்றன. இவையெல்லாம் அவரியற்றின என்று துணிவதற்குஎத்தகைய சான்றுங் காணவில்லை. ஆகவே, குறள் ஒன்றே ஆசிரியரியற்றி முடித்த ஒரு நூல், ஒரு தனி நூல் என்றே கொள்ளக் கிடக்கின்றது. அதனை ஒத்த ஒரு நூலை இயற்றி முடிக்க ஓர் உண்மை ஆசிரியர்க்கு அவரது ஆயுட்காலம் முழுதும் பிடிக்குமென்றும், அதனை இயற்றி முடித்தபின் வேறொன்று தொடும் நோக்கமே அவர்க்கு இருந்திருத்தல் முடியாது என்றும் நான் கருதுகிறேன். தீங்கனியாகிய ஒரு மாம்பழத்தைப் பிழிந்தால் எவ்வளவு சாறு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_10.pdf/263&oldid=1579888" இலிருந்து மீள்விக்கப்பட்டது