உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 10.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2

மறைமலையம் - 10

இந்நூலைப் பற்றிய குறிப்புரை...

சென்னை மாநிலத் தமிழர் மாநாட்டின் புலவர் பேரவையில் அவைத்தலைவராயிருந்து திருவள்ளுவராண்டு 1964 வைகாசித் திங்கள் 29 ஆம் நாளில் அடிகளார் ஆற்றிய சொற்பொழிவே இந்நூல் அடிப்படையாகும்.

தமிழகத்தின் தனிச்சிறப்பும், தமிழின் இயலமைப்பும், தமிழர் தம் மெய்ம்மை விழையும் மேன்மையும், தமிழ்ப் புலவோர் தன்மையும், தமிழக மன்னர் மாண்பும், தமிழ்ப் பண்பாடு உலகளாவிய செய்தியும், பொய்மை யாளரின் பொல்லாங்கும், அயல் மொழி ஆர்வலர்களின் பொய்மைப் புனைவுகளுங் காட்டித் தமிழர்தம் கடமையுணர்த்தித் தமிழையும் தமிழரையும் மேலுமுயரச் செய்யும் உயரிய ஆய்வு நூலாக இது விளங்குகிறது.

தம் முன்னோரின் நிலையுணர்ந்து அவ்வுணர்வால் நிகழ் கால வாழ்வினைச் சீர்திருத்தி, வருங்கால வாழ்வில் வளம் பெற இந்நூல் வழி வகை செய்கிறது. தமிழ் நாகரிக வளர்ச்சி பற்றிய வரலாற்றையும் இந்நூல் அறிகிறோம்.

வழி

நா. செயப்பிரகாசு மறைமலை அடிகளாரின் இலக்கிய படைப்புகள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_10.pdf/27&oldid=1579649" இலிருந்து மீள்விக்கப்பட்டது