உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 10.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3

முன்னுரை

திருவள்ளுவர் ஆண்டு 1964 வைகாசித்திங்கள் 29ஆம் நாள் திருநெல்வேலி மாநகரிற்கூடிய சென்னை மாகாணத் தமிழர்மாநாட்டின் புலவர் பேரவையில் யாம் அவைத் தலைவராய் நின்று நிகழ்த்திய சொற்பொழிவையே பின்னர் மிக விரித்தெழுதி முற்கால பிற்காலத் தமிழ்ப் புலவோர் என்னும் இந் நூலாக வெளியிடலானேம். இடையிடையே வெளியூர் களிற் கூடும் அவைகளை நடத்துதற்குப் போய் வந்தமையாலுஞ், செந்தமிழ் மொழியிலுஞ் சைவ சித்தாந்தத்திலும் பொதிந்து கிடக்கும் அரும்பெரும் பொருள்களை இவ்வுலக மெங்கணு முள்ள அறிஞர்கள் தெரிந்து நலம் பெறல்வேண்டி அவையிற்றை யாம் ஆங்கில மொழியில் எழுதி இரண்டு திங்கட்கு ஒரு கால் ஒரு வெளியீடாகச் சென்ற ஒன்றரையாண்டுகளாக வெளியிட்டு வருதலாலும், இவற்றிடையே எம்முடைய பல புதிய தமிழ் நூல்களையுஞ் செலவாய்ப்போன பல பழைய தமிழ் நூல் களையும் அச்சிடுவித்துவருதலாலும், இவற்றின் பொருட்டு இரவு பகல் ஓவாது பற்பல நூல்களை ஆராய்ந்து வருதலாலும், பலதிறத்தவான இந் நன்முயற்சிகளினூடே உடம்பு நலங் குன்றிப் பின்னரது முன்போல் மீண்டு நன்றாதற்குப் பல நாட்கள் கழிதலாலும், இந்நூல் இடையிடையே விட்டு விட்டெழுதி முடிவுபெறுதற்கு இரண்டாண்டுகளும் மூன்று திங்களும்

ஆயின.

முற்காலத்து விளங்கிய செந்தமிழ் நல்லிசைப்புலவர்கள் தமதருமைச் செந்தமிழ்மொழியைத் தம் ன்னுயிரினும் விழுமிதாக ஓம்பிப், பொய்சிறிதுங் கலவா அறவுரையே பகருந் தமது நாவால் மெய்ப்பொருள்களையே நிரப்பிய பாக்களும் நூல்களும் அதன்கண் இயற்றி, அதனை மேன்மேல் உரம்பெற வளர்த்துவந்தனர். அஃது அஞ்ஞான்று மலைமேல் ஏற்றிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_10.pdf/28&oldid=1579650" இலிருந்து மீள்விக்கப்பட்டது