உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 10.pdf/282

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

த

திருக்குறள் ஆராய்ச்சி

257

என்னும் இப்பகுதி எத்துணை மேதக்க அறவுரை பொதிந்த தாய் எந்நாட்டவரானும் எக்கொள்கையினரானும் பொன்னே போற் போற்றற்பாலதா யிருக்கின்றது? கஙஅ அடிகளே யுடைய இக்கபிலரகவலிற் பொதிந்துள்ள அறிவுரைகளத் னையுந், திருக்குறளிற் போந்த அறவுரைகளோடு ஒத்து, அவற்றினுஞ் சுருக்கமுடையனவாய்ப், பயில்வோருள்ளத்திற் பசுமரத்தாணியெனப் பதியுங் கூர்மை வாய்ந்து திகழ்கின்றன. இத்துணைச் சிறந்த அறவுரை பகரும் ஒரு விழுமிய நூலை ஒருவர் பொய்யாகக் கட்டி, அதனைக் கபிலர் பெயராற் புனைந்து விட்டாரென்னும் பொய்யுரையினும் மிக்கதொரு புளுகுரையினை யாண்டுங் கண்டிலேம்.

L

மேலும், ஒருவர் தம்மை யுயர்த்துதற் பொருட்டுப் பொய்யான பல கதைகளைக் கட்டி ஆக்கியதொரு நூலாயின் அதனைக் கட்டு நூலென்றல் வாய்வதேயாம். மற்று, இக் கபிலரகவலின் ஆசியராகிய கபிலரோ தம் அன்னை புலைச்சி யென்றும், அவள் ஒரு முனிவரைக் கூடித் தம்மை யுள்ளிட் எழுவர் மக்களைப் பயந்தனளென்றும்; அவருள் ஒருவர் வண்ணாரகத்திலும், மற்றொருவர் கள்விற்பார் சேரியிற் சான்றார் வீட்டிலும், மற்றொருவர் பாணரில்லத்திலும், பின்னுமொருவர் குறவர் குடிசையிலும், ஏனையொருவர் துளுவவேளாள ரகத்தினிலும், வேறொருவர் அதியமான் இல்லிலுந், தாம் அந்தணரகத்திலும் வளர்ந்தனரென்றுந் தமது பிறப்பினிழிபையுந், தம்முடன் பிறந்தாரிற் பலர் இழிந்த குலத்தாரிடம் வளர்ந்த இழிபையுந் தினைத்தனையும் ஒளியாமல் நிகழ்ந்தவற்றை நிகழ்ந்தவாறே எடுத்துரைக்கும் பொய்யா நாவிற் சான்றோராகிய கபிலர் பெருமான் ஆக்கிய இவ்வுறுதி நூலைக் லைக் கட்டுநூலென்றார் உரையே பெரியதொரு பொய்க் கட்டாம். இது கட்டு நூலாயின், எழுவரின் இழிந்த பிறப்பும், அவர் பெயரும், அவர் பிறந்த ஊரும், அவர் வளர்ந்த டமும், அவரிற் பெரும்பாலார் வளர்ந்த இழிந்த குடியும், எல்லா மக்களுயிர்க்கும் உறுதி பயக்கும் விழுமிய அறவுரைகளும் இதன்கட் சொல்லப்படுமோ வென்று நடுநின்று ஆராய்ந்து காண வல்லார்க்கு, இதனைக் கட்டு நூலென்று கரைந்தார் பார்ப்பனரும் அவர் வழிப்பட்டார் சிலருமே யல்லால், ஏனைப் பொய்யா நாவினர் அங்ஙனஞ் செய்யாரென்பது தெற்றென விளங்கா நிற்குமென்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_10.pdf/282&oldid=1579907" இலிருந்து மீள்விக்கப்பட்டது