உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 10.pdf/281

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

256

மறைமலையம் 10

நூல்

மேலுந், தம்மை யுயர்த்தி மற்றை யெல்லா வகுப்பினரை யும், வேசிமக்கள் அல்லது அடிமைகள் எனப் பொருள்படுஞ் “சூத்திரச்” சொல்லால் வழங்கும் பார்ப்பனரின் களாகிய "மிருதி"களையும் “புராணங்களை" புராணங்களை”யும் “வேதங் களை”யும் பார்ப்பனர்கள் தாமே எழுதி வைத்துக்கொண்டு, அவைகளைத் தாமெழுதிய நூல்கள் என்றால் அவற்றுள் நடுவிகந்து சொல்லியவைகளைப் பிறர் நம்பாரெனக் கருதி, அவைகளெல்லாம் இறைவன்அருளிச் செய்தவைகள் என்று அவர்கள் கட்டி விட்டாற் போல, இக்கபிலரகவல் நூலில் உலகவியற்கை மக்களியற்கைக்கு வேறாய் நடுவிகந்து கட்டிச் சொல்லப்பட்டது ஏதேனும் ஓரெட்டுணையாயினும் உண்டா? ஒரு சிறிது மில்லையே. இக்கபிலரகவலிற் சொல்லப்பட்ட அறங்கள் அத்தனையும் எல்லா மதத்தவ ராலும் எல்லா மக்கட் பிரிவினராலும் உவந்தேற்றுக் கொள்ளப்படும் விழுப்பம் வாய்ந்தனவா யிருத்தல், அதன் மேற்காட்டிய பகுதிகளால் விளங்குவதொடு பிற்காட்டப் படும் பகுதியானும் நன்கு விளங்குதல் காண்க.

"மாரிதான் சிலரை வரைந்து பெய்யுமோ? காற்றுஞ் சிலரை நீக்கி வீசுமோ?

மாநிலஞ் சுமக்க மாட்டே னென்னுமோ? கதிரோன் சிலரைக் காயே னென்னுமோ? வாழ்நான்கு சாதிக் குணவு நாட்டிலுங் கீழ்நான்கு சாதிக் குணவு காட்டிலுமோ? திருவும் வறுமையுஞ் செய்தவப் பேறுஞ் சாவதும் வேறிலை தரணி யோர்க்கே. குலமும் ஒன்றே, குடியும் ஒன்றே. இறப்பும் ஒன்றே, பிறப்பும் ஒன்றே, வழிபடு தெய்வமும் ஒன்றே யாதலால், முன்னோர் உரைத்த மொழி தவறாமல் எந்நா ளாயினும் இரப்பவர்க் கிட்டுப், புலையுங் கொலையுங் களவுங் தவிர்ந்து நிலைபெற அறத்தின் நிற்பதை அறிந்து ஆணும் பெண்ணும் அல்லதை உணர்ந்து, பேணி யுரைப்பது பிழையெனப் படாது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_10.pdf/281&oldid=1579906" இலிருந்து மீள்விக்கப்பட்டது