உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 10.pdf/280

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* திருக்குறள் ஆராய்ச்சி

255

என்றும்,

“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்குஞ் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யால்'

(குறள் 972)

என்றும்,

"மேலிருந்தும் மேலல்லார் மேலல்லர் கீழிருந்துங் கீழல்லார் கீழல் லவர்”

(குறள் 973)

என்றும் அருளிச் செய்திருத்தல் நினைவிற் பதிக்கற் பாற்று.

மேற்காட்டியவாற்றால் இக்கபிலரகவல் என்னுஞ் சிறந்த தமிழ்நூல், சாதியிறுமாப்புக் கொண்டு, தம்மவரல்லாத பிறரிற் றோன்றிய சான்றோரை யெல்லாம் இழித்துக்கூறி, அவரது அறிவின் பயனை மக்கள் பெறவொட்டாது தடைசெய்யும் பார்ப்பன வகுப்பினர்க்கு அறிவு தெருட்டும்பொருட்டு ஆக்கப் பட்டதொன்றாதல் தெற்றென விளங்குதலின், இதனைக் கட்டு நூலென்றார் உரை மெய்ம்மை யுணராக் கட்டுரையாமென்க.

மேலும், ஊற்றுக்காட்டில் உப்பை என்னுந் தம் தமக்கையார் பிறந்து ஒரு வண்ணாரகத்தில் வளர்ந்தமையுங், காவிரிப்பூம்பட்டினத்திற் கள்விற்பார் சேரியில் தம் மற்றொரு தமக்கையாரான உறுவை பிறந்து ஒரு சான்றார் வீட்டில் வளர்ந்தமையும், அப்பட்டினத்திலேயே யாழ் பயிலும் பாணச்சேரியில் ஓர் யழ்ப்பாணரில்லில் தம் மற்றொரு தமக்கை யாரான ஒளவையார் வளர்ந்தமையும், வள்ளிமலையில்

னப்புனஞ் சூழ்ந்த மலைச்சாரலில் தம் தம் மற்றொரு தமக்கையாரான வள்ளி பிறந்து ஒரு குறவர் தலைவன் வீட்டில் வளர்ந்தமையுந், தொண்டைமண்டலத்தின் கண்ணதான திருமயிலாப்பூரில் தந் தமையனரான திருவள்ளுவர் பிறந்து ஒரு துளுவ வேளாளரிடத்தில் வளர்ந்தமையும், வஞ்சிமா நகரிற் றம் மற்றொரு தமையனாரான அதியமான் பிறந்து அதியமான் இல்லில் வளர்ந்தமையுங், கடைமுறையாக எல்லார்க்கும் இளவ லாகிய தாந் திருவரூரிற் பிறந்து ஓர் அந்தணர் இல்லில் வளர்ந்தமையும் நிகழ்ந்தன நிகழ்ந்தாங்கு எடுத்துக்கூறும் இவ்வுண்மை நூலைக் கட்டு நூலென்றார் உரையே பெருங் கட்டா யிருக்கின்றது!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_10.pdf/280&oldid=1579905" இலிருந்து மீள்விக்கப்பட்டது