உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 10.pdf/279

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

254

மறைமலையம் - 10

என்னும் அக்கபிலரகவலின் அடிகளே அவ்வுண்மையைப் புலப்படுத்துவனவாம். சாதிவேற்றுமையென்பது இறைவனது அமைப்பிலேயே வடிவ வேறுபாடுடைய ய விலங்கினங் களுக்கே யல்லாமல், வடிவ வேறுபாடு சிறிதும் இல்லா மக்களுக்கு இசையாதென்பதை, மேற்போந்த அடிகளில் ஆசிரியர் கபிலர் எத்துணை நுட்பமாக எடுத்துக்காட்டியிருக்கின்றார்! ஆவும் எருமையும் இயற்கையமைப்பிலேயே எவ்வளவு வேறுபட்ட வடிவம் வாய்ந்தனவாயிருக்கின்றன! ஆவும் எருமையுந் தத்தஞ் சாதியிலுள்ள ஆணையே கூடிக் கருவுறுகின்றன அல்லாமல் மாறிக்கூடிக் கருப்பெறல் இல்லையன்றே! மற்று, மக்களெல்லாரும் ரே இயற்கை யமைப்பினை யுடையராயுஞ், செயற்கையாக வகுக்கப்பட்ட சாதிமுறையில் அடங்காது ஆண்பெண் மாறிக் கலந்து கருவுற்று அதனை உயிர்ப்பவராயும் இருத்தலை யறியாதார் யார்? றைவன் இயற்கை யமைப்பிலேயே பார்ப்பனரை வகுத்தனனென்று அவர் கட்டிவிட்ட புராணகதை கூறுவது உண்மையாயின், இந்நிலவுலகத்தின் ஒருசிறு பகுதியாகிய இவ்விந்தியநாட்டின் மட்டுமே யன்றி, மற்றை நாடுகள் எல்லாவற்றின்கண்ணுமுள்ள மற்றை எல்லா மக்கட் குழுவுகளிலும் பார்ப்பனச்சாதியானது காணப்படுதல் வேண்டும்; மற்று, ஒட்டியர், மிலேச்சர், ஊணர், சிங்களர், சோனகர், யவனர், சீனர் முதலான மக்கட் கூட்டத்தாரிற் பார்ப்பனச்சாதி காணப்படாமையின் அவரது புராணக் கூற்று வெறும் பொய்யேயல்லாமல் உண்மையன்று என ஆசிரியர் அதனை எடுத்துக்காட்டி விளக்கிய திறம் பெரிது! பெரிது! மேலோர் கீழோர் என வழங்கும் வழக்கெல்லாம் அவரவர்தம் ஒழுக்கத்தின் உயர்வானும் இழிபானும் உண்டாயின பான்மையை “மேல்வகை கீழ்வகை விளங்குவது ஒழுக்கால்” என்றுஞ், “சிறப்புஞ் சீலமும் அல்லது, பிறப்பு நலந் தருமோ பேதையீரே" என்றுங் கபிலர் அறிவுறுத்தினாற் போலவே, இவர்தந் தமையனார் திருவள்ளுவரும்,

66

“ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம் இழிந்த பிறப்பாய் விடும்”

என்றும்,

“மறப்பினும் ஒத்துக் கொளலாகும் பார்ப்பான் பிறப்பொழுக்கங் குன்றக் கெடும்”

(குறள் 133)

(குறள் 134)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_10.pdf/279&oldid=1579904" இலிருந்து மீள்விக்கப்பட்டது