உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 10.pdf/278

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் ஆராய்ச்சி

ஒட்டியர் மிலேச்சர் ஊணர் சீனர்

பற்பல நாட்டினும் பார்ப்பார் இலையால்; முற்படைப் பதனிவ்வே றாகியமு றைமைபோல் நால்வகைச் சாதிஇந் நாட்டில்நீர் நாட்டினீர்! மேல்வகை கீழ்வகை விளங்குவது ஒழுக்கால்; பெற்றமும் எருமையும் பிறப்பினில் வேறே, அவ்விரு சாதியில் ஆண்பெண் மாறிக் கலந்து கருப்பெறல் கண்ட துண்டோ? ஒருவகைச் சாதியாம் மக்கட் பிறப்பினில் இருவகை யாகநீர் இயம்பிய குலத்துள் ஆண்பெண் மாறி யணைதலும் அணைந்தபின் கருப்பொறை யுயிர்ப்பதுங் காண்கின் றிலிரோ? எந்நிலத் தெந்தவித் திடப்படு கின்றதோ அந்நிலத் தந்தவித் தங்குதித் திடுமால், மாறிவே றாகும் வழக்கம்ஒன் றிலையே; பூசுரர்ப் புணர்ந்து புலைச்சியர் ஈன்ற புத்திர ராயினோர் பூசுரர் அல்லரோ?

பெற்றமும் எருமையும்பேதமாய்த் தோன்றல்போல் மாந்தரிற் பேதமாம் வடிவுஎவர் கண்டுளார்? வாழ்நாள் உறுப்புமெய் வண்ணமோடு அறிவினில் வேற்றுமை யாவதும் வெளிப்பட லின்றே;

தென்றிசைப் புலையன் வடதிசைக் கேகிற்

பழுதற ஓதிப் பார்ப்பான் ஆவன்;

வடதிசைப் பார்ப்பான் தென்றிசைக் கேகின்

நடையது கோணிப் புலையன் ஆவன் - அதாஅன்று சேற்றிற் பிறந்தசெங் கழுநீர் போலப்

பிரமற்குக் கூத்திவயிற்றிற் பிறந்த வசிட்டரும்,

வசிட்டர்க்குச் சண்டாளி வயிற்றிற் பிறந்த சத்தியரும்,

சத்தியர்க்குப் புலைச்சிதோள் சேர்ந்து பிறந்த பராசரும், பராசர்க்கு மீன்வாணிச்சி வயிற்றிற் பிறந்த வியாசரும் வேதங்கள் ஓதி மேன்மைப் பட்டு மாதவர் ஆகி வயங்கின ரன்றோ?”

253

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_10.pdf/278&oldid=1579903" இலிருந்து மீள்விக்கப்பட்டது