உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 10.pdf/277

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

252

மறைமலையம் -10

அதியன் இல்லிடை அதியமான் வளர்ந்தனன், பாரூர் நீர்நாட்டாரூர் தன்னில்

அந்தணர் வளர்க்க யானும் வளர்ந்தேன்"

என்று தம் தாய் தந்தையர் ஆதியும் பகவனும் ஆவரெனவுந், தம்முடன் பிறந்தவர் உப்பை உறுவை ஒளவை வள்ளி எனப் பெண்பால் நால்வரும், வள்ளுவர் அதியமான் கபிலர் எனத் தம்மைச் சேர்த்து ஆண்பால் மூவரும் ஆவரெனவுங் கூறும் இதனினும் மிக்கதொரு சான்று பிறிதின்மையிற் றிருவள்ளு வரின் பெற்றோர் ஆதியும் பகவனுமே யென்றலிற் சிறிதும் மாறுபாடில்லையென்க.

இனி, இக்கபிலரகவல் எளிய தமிழ் நடையில் இயற்றப் பட்டிருத்தல் கொண்டுங், கபிலர்க்குப் பூணூல் இட ஒருப்படாத பார்ப்பனக் குழுவினர்க்கு அறிவு தெருட்டல் வேண்டிச் சிறு பிள்ளையாயிருந்த கபிலர் இதனைச் செய்தாரென வழங்குங் கதை நம்பத்தகாததாயிருத்தல் கொண்டும் இது கபிலராற் செய்யப்பட்டதன்றென்றும், இஃதொரு “கட்டுநூல்” என்றுங் கூறினாருமுளர். இக்கபிலரகவல் இயற்றப்பட்டதற்குக் காரணங் கூறுங் கதை நம்பத்தகாததுபற்றி இந் நூலையே கட்டு நூலென்றல் ஆராய்ச்சி யுணர்வில்லாதார் கூற்றாகும். கல்விநலம் மனநலம் ஒழுக்கநலம் முதலியவற்றை நோக்ாது, இந்நலங்கள் இல்லாரையும் பிறப்பளவில் உயர்த்துதலும், இந்நலங்கள் உடையாரையும் பிறப்பளவில் இழிபடுத்துதலுஞ் செய்துபோந்த அஞ்ஞான்றைப் பார்ப்பனமாந்தர்க்கு அறிவு கொளுத்தும் பொருட்டாகவே இவ்வரிய நூல் கபிலரால் இயற்றப்பட்டதென்பதுமட்டும் மறுக்கப்படாததாகும்; இதற்கு அகச் சான்றாகப் போந்த,

“பார்ப்பன மாந்தர்காள் பகர்வது கேண்மின்! இறந்தவராய் உமை இல்லிடை யிருத்திப்

பாவனை மந்திரம் பலபட உரைத்தே உமக்கவர் புத்திரர் ஊட்டின போது அடுபசி யாற்குலைந் தாங்கவர் மீண்டு கையேந்தி நிற்பது கண்டதார் புகலீர்! அருந்தியஉண்டியால் யாபசி கழிந்தது?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_10.pdf/277&oldid=1579902" இலிருந்து மீள்விக்கப்பட்டது