உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 10.pdf/276

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் ஆராய்ச்சி

251

முன்நின்ற ‘ஆதி’ என்பது தம் அன்னையார்க்கும், பின்நின்ற ற ‘பகவன்' என்பது தம் தந்தையார்க்கும் பெயராயமைந்து, அவ் விருவரையுந் தமது தமது நினைவிற் கொணர்தல் L

யாமென்பது திண்ணம். பிறந்தவரான ஒளவையாரும்,

66

திருவள்ளுவனாரோடு

'அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்"

பற்றியே

உடன்

அவருந் தவ

என்று கூறியிருத்தலை உய்த்துணருங்கால் உய்த்துணருங்கால் நலத்திற் சிறந்த தம் தாய் தந்தையரை நினைந்தே அங்ஙனம் கூறினார் என்பது புலனாம்.

இனித் திருவள்ளுவனாரோடு ஒரு வயிற்றிற் பிறந்த கபிலர் என்னும் அந்தணர் பெருமான் தமது வரலாற்றினைத் தங்குடியினரான பார்ப்பனருக்குத் தெரிப்பான் வேண்டிஇயற்றிய அகவலில்,

“அருந்தவ மாமுனி யாம்பக வற்குக்

கருவூர்ப் பெரும்பதிக் கட்பெரும் புலைச்சி ஆதிவயிற்றினில் அன்றவ தரித்த

கான்முளை யாகிய கபிலனும் யானே,

ன்

என்னுடன் பிறந்தவர் எத்தனை பேரெனில்

ஆண்பான் மூவர் பெண்பால் நால்வர்,

யாம்வளர் திறஞ்சிறிது இயம்புவல் கேண்மின்! ஊற்றுக் காடெனும் ஊர்தனிற் றங்கியே வண்ணார் அகத்தினில் உப்பை வளர்ந்தனள், காவிரிப்பூம் பட்டினத்திற் கள்விலைஞர் சேரியில் சான்றார் அகந்தனில் உறுவை வளர்ந்தனள், நரப்புக் கருவியோர் நண்ணிடு சேரியிற் பாணர் அகத்தினில் ஒளவை வளர்ந்தள்: குறவர் கோமான் கொய்தினைப் புனஞ்சூழ் வண்மலைச் சாரலில் வள்ளி வளர்ந்தனள், தொண்டை மண்டிலத்தில் வண்டமிழ் மயிலையில் நீளாண்மை கொளும் வேளாண் மரபுயர் துள்ளுவரிடத்தில் வள்ளுவர் வளர்ந்தனர், அரும்பார் சோலைக் கரும்பார் வஞ்சி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_10.pdf/276&oldid=1579901" இலிருந்து மீள்விக்கப்பட்டது