உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 10.pdf/275

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

250

மறைமலையம் 10

முகத்திற் கடவுளைக் குறித்தற்கு எத்தனையோ பல தனித் தமிழ்ச் சொற்களிருப்பவும் அவற்றை யெல்லாம் விடுத்து, ‘ஆதிபகவன் என்னும் வடசொற்றொடரைத் தெரிந்தமைத்ததற்குக் கழிபெருங் காரணம் ஒன்றிருத்தல் வேண்டுமன்றோ? அக்காரணந்தான் யாதோவெனிற், றம் தாய் தந்தையர் தமக்குச் செய்த நன்றியை அதனால் நினைவு கூர்தற்கு அவர் விழைந்தமையே உறுபெருங் காரணமா மென்க.

ஏனை

இங்ஙனமே, நூலியற்றும் பேராசிரியர், தம் தாய் தந்தையர் உடன்பிறந்தார் சுற்றத்தாரைப் பற்றிய குறிப்பு களையும், தம்முடைய வாழ்க்கைக் குறிப்புகளையுந் தாமி யற்றும் நூல்களிலே ஆங்காங்குக் குறிப்பாலும் வெளிப் படையாலும் நுவன்று செல்லுதல் இயல்பு, சைவ சமயா சிரியர்களான திருஞானசம்பந்தர். அப்பர், சுந்தரர், மாணிக்க வாசகர் என்னும் நால்வருந் தாம் அருளிச் செய்ததேவார திருவாசகங்களில் தம்முடைய வரலாற்றுக் குறிப்புகளைப் பெரும்பாலும் வெளிப்டையாகவுஞ் சிறுபான்மை உய்த் துணரவைப்பாகவும் அமைத்துரைத்தல் காண்க. நூலாசிரியர் அவர்போற் றம்முடைய குற்றங் குறைகளை றைவனிடத்தே முறையிட்டுச் சொல்லிப் பாடுதலிலராய், அறம் பொருள் இன்பங்களையும், ஒரு கதை தழுவிவருந் தொடர்நிலைச் செய்யுட்களையும் இயற்றினார்களாகலின் அவை தம்மிற் றம்முடைய வாழ்க்கைக் குறிப்புகளை வெளிப்படையாய்ச் சால்ல இடம்பெறாது, அவை தம்மிற் சிலவற்றை ஆங்காங்குக் குறிப்பாகவே நுவலலாயினர். நூலாசிரியர்க்குரிய இவ்வழக்காறு, தமிழ்நூலாசிரியர்பாலேயன்றி, ஆங்கிலம் ஆரியம் முதலான ஏனை மொழி நூலாசிரியர்பாலுங் காணப்படுதலும், அவருடைய நூல்களை ஆராய்ந்து நுட்பங்கள் வரையும் உரை வல்லார்கள் அதனைத் தெரிந்தெடுத்தெழுதலும் அவ்வந் நூல் வல்லார்வாய்க் கேட்டுணரப்படும். ஆகவே, இங்குத் தெய்வப் புலமைத் திருவள்ளுவ நாயனார், தமது தெய்வச் செந்தமிழ் மொழிமேல் வைத்த பற்றினையும், செந்தமிழாக்கங் கண்ணுங் கருத்துமாய்ப் பேணும் தம் காலத்து நல்லிசைப் புலவர் மேற்கொண்ட தனிச் செந்தமிழ் வழக்கினையும் மீறி "ஆதிபகவன்’ என்னும் வடசொற்றொடரால் முழுமுதற் கடவுளுக்குத் தமது நூலின் முதலிலேயே பெயர் கூறுவாரானது, அத் தொடரின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_10.pdf/275&oldid=1579900" இலிருந்து மீள்விக்கப்பட்டது