உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 10.pdf/274

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் ஆராய்ச்சி

249

இவ்விரு நூல்களாலும் அறியப்படும். தமிழ்நாட்டிலுள்ள வர்கள் தம்மின் மூத்தாரையுங் கல்வியறிவின் மிக்காரையும் பிற சிறப்புகள் உடையாரையும் அவர்க்குரிய இயற்பெயரான் வழங்குவது குற்றமாமெனக் கருதி, அவர் பிறந்த ஊர்ப் பெயரானாதல் அன்றி வேறு சிறப்புப் பெயர்களானாதல் அவரைக் குறித்து உரையாடுதல் தொன்றுதொட்ட வழக்க மாய்ப் போதருகின்றது.

ஆதலாற், திருவள்ளுவரின் தந்தையார்க்கு இரண்டு நூல்களில் இரு வேறு பெயர்கள் ஓதப்பட்டதில் ஏதும் மாறுபாடில்லை யென்க. திருவள்ளுவர் தந்தையாரின் பெய ரளவிற் சிறிது மாறுபாடு காணப்படினும், அவர் தவ வொழுக்கத்திற் சிறந்த முனிவரென்பதும், அவர் தம் அன்னை யார் ஒரு புலைச்சியே யென்பதும் கபிலரகவற்கும் ஞானாமிர்தத் திற்கும் ஒத்த முடிபாயிருத்தலே கருத்திற் பதிக்கற்பாலதாகும். அம் முனிவர்பிரான் விழுமிய அந்தணர் மணியாயிருந்தும், பிறப்பளவில் இழிந்தாளாகக் கருதப்படும் ஒரு புலைச்சியை விழைந்து அவளை அவர் மணந்துகொண்ட பான்மையினை நினைத்துப் பார்க்குங்கால், அத்துணைச் சிறந்த பெரியா ருள்ளத்தைக் கவரத்தக்க மனநலமுங் கற்பொழுக்கமும் வனப்பும் அவ்வம்மையார் உடையாராயிருந்தாராகல் வேண்டு மென்பது இனிது விளங்கா நிற்கும். தாம் ஈன்ற குழவிகளை ஈன்ற இடங்களில் உள்ளார்க்கே தந்து பற்றின்றிச் சென்ற பகவனாரின் கருத்துக்கு, மாறின்றி யொழுகி, அவருடன் நிழல்போற் சென்ற ஆதியம்மை யாரின் பற்றற்ற உள்ளமுங் காதற் கற்பொழுக்கமும் மிகவும் பாராட்டற்பாலனவாகும்.

இனித், தம் தந்தையார் பெயர் ‘பகவன்’ என்றிருத் தலையுந்,தம் தாயார் பெயர் 'ஆதி' என்றிருத்தலையுங் கருதித், தம்மைப் பெற்ற அவ்விருவர் செய்த நன்றியையும் அன்பினால் அகங்குழைந்துருகி நினைந்தமையாற்றான்,ஆசிரியர் திருவள்ளுவர் தாம் இயற்றியருளிய திருக்குறள் என்னும் ஒப்புயர்வில்லாத் தனிச் செந்தமிழ் நூலின் முகத்தே கடவுள் வழிபாடு செய்கின்றுழி அம்முழுமுதற் கடவுள் பெயராக ஆதிபகவன் என்னும் அவ்விரு வடசொற்றொடர்ந்த தொடரை முதற் செய்யுளிலேயே அமைத்தருளினார். 'திருக்குறள்' நூன் முழுதுந் தனிச் செந்தமிழ்ச் சொற்களினாலேயே யாத்திட்ட அப்பேராசிரியர், அந்நூன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_10.pdf/274&oldid=1579899" இலிருந்து மீள்விக்கப்பட்டது