உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 10.pdf/273

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

248

9. திருவள்ளுவர்

செந்தமிழ் மொழிக்கொரு நந்தாமணி விளக்க மாய்த் தோன்றித், தன்கட் சுடர்ந்தொளிரும் அறிவுப் பேரொளியைத், தான்பிறந்த தமிழ் நாட்டவர்க்கு மட்டுமே யன்றி, இந்நிலவுலகின் பிறபகுதிகளிலுள்ள பிறநாட்டு மாந்தர்க்கும் வேற்றுமையின்றி வீசி, எல்லாரையும் ஒரே முழுமுதற்கடவுளாம் ஒப்பற்ற தந்தைக்கு உரிமைமகாராய் வைத்து, அவரறிய வேண்டும் அரும்பொருள் முற்றும் ஒருங்கே அறிவுறுத்துந் தெய்வத் திருக்குறள் என்னும் நூலை அருளிச் செய்த பெரியாரையும் அவரது வரலாற்றையும் அறிய விரும்பாதார் யார் ? எவரும் இராரன்றோ? ஆதலால் அவரைப்பற்றிய குறிப்புகள் சிலவற்றை இங்கு வரைவாம்.

திருவள்ளுவ நாயனார், கிறித்து சமய முதல்வரான ஏசு முனிவர் பிறப்பதற்கு முப்பதாண்டுகள் முன்னரே பிறந் தருளினாரென்பதை மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும் என்னும் எமது பெருநூலிலே பல நூற் சான்றுகள் கொண்டு விளக்கிக் காட்டியிருக்கின்றாம். அதன் விரிவை அங்கே கண்டு கொள்க.

இவர்தந் தந்தையார் தந்தையார் பெயர் ‘பகவன்’ எனப்படு மென்றும், இப்பகவன் தமிழ்நாட்டுத் தாபத வொழுக்கத் தினரான ஓர் அந்தணராவரென்றம், இவர் தம் அன்னையார் கருவூரிற் புலையர் குலத்திற் பிறந்து ‘ஆதி எனப் பெயர் பெற்றவரென்றும் கபிலரகவல் கூறுகின்றது. இனி னி ஞானாமிர்தம் என்னும் வீட்டு நூல் திருவள்ளுவரின் தந்தையார் பெயர் ‘யாளிதத்த முனிவர்' எனக் கூறுமேனும், இவர் தம் அன்னையார் ஒரு புலைச்சி யென்றே மேலை வரலாற்றோடு ஒருப்பட்டுரைக்கின்றது. யாளிதத்த முனிவரென்பது இயற் பெயராகவும், பகவன் என்பது சிறப்பு பெயராகவுந் திருவள்ளுவரின் தந்தையார் ஒருவர்க்கே வழங்கி வந்தமை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_10.pdf/273&oldid=1579898" இலிருந்து மீள்விக்கப்பட்டது