உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 10.pdf/272

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* திருக்குறள் ஆராய்ச்சி

247

என்று ஆசிரியர் வரையறுத்துக் கூறியது ஜான் ஸ்டூவர்ட் மில் என்பாரின் “பெரும்பயன்” என்ற “யுட்டிலிட்டேரி யானிஸம்’ (Utilitarianisam) என்ற கொள்கைக்கு அரண் கோலுவது கண்டு வியவாதார் யார்? இன்னும் இவ்வாறே விரிக்கிற் பெருகும்.

1330 அருங்குறளையும் பாடம் பண்ணியிருந்த யான் இப்பொழுது பாதிக்குமேல் மறந்துவிட்டிருக்கிறேன். மறப்பென்னும் பகைவன் வாரிக்கொண்டான். என் செய்வது! ஒப்பில் பெரு நூலாகிய இக்குறணூலின் பெருமையையும் ஆசிரியர் பெருமையையும் யான் கூறித் தங்களை மகிழ்வித்தற்கு வசதி கிடைத்தமை நோக்கி இறைவனருளை வழுத்துகிறேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_10.pdf/272&oldid=1579897" இலிருந்து மீள்விக்கப்பட்டது