உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 10.pdf/271

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

246

❖ LDM MLD MOLD - 10 மறைமலையம்

என்று திருந்த மொழிந்தார். உள்ளம் வேறு ஒன்றைப் பற்றி னாலன்றிப் பற்றிய ஒன்றை விடாது. குடிகாரனைக் குடியாதே என்று சொன்னாற் கேளான்; ‘கள்ளைக் குடியாதே, பாலைப் பருகு; பழச்சாற்றைக் குடி' என்றாற்றான் வழிக்கு வருவான். இது மன நூலிற் கண்ட உண்மை.

இனி, திருக்குறளாகிய நீதி நூலைப் படிப்பதில் ஒருவர்க்கு மனம் அதிர்ச்சியடையக் கூடும். இருந்தாலும், பெரும்பயன் கருதி அதனைப் படித்தலே சீரிதாம். படித்த குறளைக் கொண்டு தான் அவ்வழி நின்றாலன்றி, ஒருவன் பிறன் மாட்டுங் குற்றங் கண்ட விடத்து அவனைத் திருக்குறட் சான்றாகத் திருத்த முயலு தலாகாது. கற்றதற்குத் தக ஒழுகுதலே சிறந்தது என்பது ஆசிரியர் முடிபு.

ஒவ்வோர் அறநெறியையும் செய்துதான் ஆக வேண்டும் என்று ஆசிரியர் வற்புறுத்திக் கூறவில்லை;

“ஒல்லும் வகையா னறவினை யோவாதே

செல்லும்வா யெல்லாஞ் செயல்”

(குறள் 33)

என்றுதான் கூறினார். ஒவ்வொன்றைப் பற்றிக் கூறும் போதும் அதனினும் சிறந்தது வேறில்லை என்று ஆசிரியர் கூறியுள்ளா ரேனும், மிகவும் நுணுக்கமாகத் தராதரம் உய்த்துணருமாறு வைத்தே கூறிப் போந்துள்ளார்.

“பொய்யாமை பொய்யாமை யாற்றி னறம்பிற

செய்யாமை செய்யாமை நன்று”.

என்று “வாய்மை" யிற் கூறிய ஆசிரியர்,

"ஒன்றாக நல்லது கொல்லாமை மற்றதன்

பின்சாரப் பொய்யாமை நன்று”.

(குறள் 297)

(குறள் 323)

என்று வகுத்துள்ளார். இதுவே அவர் நூலியற்றும் நுணுக்கச்

சிறப்பாகும்.

இனி,

“வாய்மை யெனப்படுவ தியாதெனின் யாதென்றும் தீமை யிலாத சொலல்”.

(குறள் 291)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_10.pdf/271&oldid=1579896" இலிருந்து மீள்விக்கப்பட்டது