உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 10.pdf/270

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் ஆராய்ச்சி

“ஈத்துவக்கு மின்ப மறியார்கொ றாமுடைமை வைத்திழக்கும் வன்க ணவர்”.

245

(குறள் 228)

என்று ஆசிரியர் கூறியது இது கருதியேயன்றோ? இத் ஆ திருவள்ளுவர் திருநாட் கழகத் தலைவராயிக்கும் என் நண்பர் திரு. கா. நமச்சிவாய முதலியாரவர்கள் வீட்டிற்குச் சென்றவர்கள் இல்லை என்று திரும்பியதில்லை என்று நான் பன்முறை கேள்விப்பட்டிருக்கிறேன்; வறியர் வறுமை தீர்வர்; பசித்தார் பசி தீர்வர், உதவி நாடியோர் உதவி பெறுவர். இவரன்றோ உண்மைத், தமிழர்! இனி ஈத்துவக்கும் இன்பத்திற்கும் பெருமைக்கும் எடுத்துக்காட்டாகச் சங்கச் செய்யுட்களில் வழங்கும் குமணானர் பெருஞ்சித்திரனார் நிகழ்ச்சி யாவருமறிந்ததே. இரந்தவன் இன்முகங் காணுவதே இலக்காக அக்காணுமளவு ஈதலே ஈகையாம். இத்தகைய ஈதலறத்திற்கு முதற்கண் வேண்டப்படுவது நட்பினர், பகைவர், நொதுமலர் என்றின்றி, வருவோர் யாவர் மாட்டும் இன்முகங் காட்டிஇன்சொற் கூறுதலேயாம்.இதனாலேயே இன்னாச் சொல் நீக்கத்தின் இன்றியமையாமை தெற்றென விளங்கும்.

இனி அறத்தை இல்லறம் துறவறம் என்று இரண்டாகப் பகுத்துக் கூறியது திருவள்ளுவர்தாம். அவர் காலத்திற்கு முன் அவ்வாறு பகுத்துக் கூறப்பட்டுள்ளதாகக் காணப்படும் நூல் ஒன்றுமில்லை. தமிழுக்கு வைரத் தூணெனக் கருதப்படும் தொல்காப்பியத்திலும் இப்பிரிவினை காணப்படவில்லை. மனைவியோ டுடனிருந்து அறத்தாற்றி னில்வாழ்க்கை யாற்றி ஏமஞ்சான்ற மக்களோடு துவன்றி இறைவனை நினைந்திருத்தலே சிறந்த செயலாகத் தொல்காப்பியத்திற் கூறப்பட்டது. பௌத்த சமணக் கொள்கைகள் பரவி, மனை வாழ்க்கை வெறுக்கப்பட்டு, துறவறம் பெரிதும் பாராட்டப்பட்டு வந்த காலத்தே ஆசிரியர் குறளை எழுத நேரிட்டதாகையால், இப் பிரிவினையைத் தாம் கைக்கொண்டார் போலும்! துறவறத்தைக் கூற வந்தாரேனும், ஆசிரியர் பௌத்த சமணர்களைப் போல் கடிய கொடிய முறைகளைக் கூறாமல்,

“பற்றுக பற்றற்றான் பற்றினை யப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு.”

(குறள் 350)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_10.pdf/270&oldid=1579895" இலிருந்து மீள்விக்கப்பட்டது