உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 10.pdf/269

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

244

மறைமலையம் -10

என்றார் ஆசிரியர். இந் நான்கும் சேராமற் காத்தலே அறம் என்றார். அழுக்காறு என்ற ஒன்று, கொண்டவனுக்கும் அதற்கு இலக்கானவனுக்கும் ஒருங்கே கேடு பயக்கும். பேராவல் அல்லது பேராசையால் பல துன்பங்கள் எய்தும் என்பது கண்கூடு. இனி, இ வெகுளியோ, சினக்க வேண்டிய விடத்திற் சினவாமல், அல்லிடத்துச் சினத்தலாம். இச் சினத்தால் பிறர்க்கே யன்றிச் சினங் கொண்டானுக்கும் துன்பம் நேர்தலுறுதி. சினம் கொள்வதால் உடல் ஒருவித நடுக்கமுறுகிறது. இதனாலேயே, “சினம் என்னும் சேர்ந்தாரைக் கொல்லி” என்று கூறிய ஆசிரியர் அதனை நன்கு விளக்குவான் கருதி,

"சினத்தைப் பொருளென்று கொண்டவன் கேடு நிலத்தறைந்தான் கைபிழையா தற்று".

(குறள் 307) என்று அடுத்து மொழிந்தார். மிகுந்த சினத்தினால் திடுமென ஒருவர் உயிர் நீத்ததை நானறிவேன். ஒரு தாய் தன் குழந்தைக்குப் பால் கொடுத்துக் கீழே கிடத்தினாள்; குழந்தை இறந்துவிட்டது. காரணந் தெரியவில்லை. ஆராய்ச்சி செய்து பார்த்ததில் தாயின் பால் நஞ்சாக மாறியிருந்த தறுவாயில் குழந்தை அப்பாலையுண்ட தால் இறக்க நேரிட்டதென்றும், அவ்வாறு பால் நஞ்சாக மாறியது, பால் கொடுக்குங் காலத்து அண்டை வீட்டுக்காரி ஒருத்தியுடன் தாய் மிகவுஞ் சினந்து சண்டை போட நேர்ந்தமை தானென்றும் தெரியவந்தன என்று ஒரு மேனாட்டறிஞர் குறித்துள்ளார். சில நேரங்களில், என்னையுமறியாமல் எனக்குச் சினம் மிகுந்த காலை, என் உயிரே போவது போல எனக்குத் தோன்றியதுண்டு; அன்றியும், அதன்பின் ஏழெட்டு நாட்கள் வரை உடல்நலங் குன்றிக் கிடப்பேன். இனி, இன்னாச் சொல்லும் விலக்கற்குரித்தாம்.

“தீயவை தீய பயத்தலால் தீயவை தீயினு மஞ்சப் படும்”.

(குறள் 202)

தீமை என்றவுடனே துறக்க நிரயம் என்று கொண்டுவிட வேண்டுவதில்லை. “அறஞ் செய்தான் சுவர்க்கம் புகும்; மறஞ் செய்தான் நிரயம் புகும்” என்று கூறுவதெல்லாம், 'நன்மை செய்தால் நன்மை விளையும் தீமை செய்தால் தீமை விளையும்’ என்பதைக் குறிப்பதற்கேயாம். சிலர்க்கு அறஞ் செய்வதால் பெரியதோரின்பம் விளையக்கூடும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_10.pdf/269&oldid=1579894" இலிருந்து மீள்விக்கப்பட்டது