உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 10.pdf/284

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் ஆராய்ச்சி

259

வள்ளுவர் என்பார் பறையர்க்குக் குருமாராய்க் குறி சொல்லிப் பிழைக்கும் ஒரு வகுப்பினர் ஆவர். இச்சொல் ‘வள்’ என்னும் முதனிலையிற் பிறந்து ‘தோல்வினைஞர்' எனப் பொருள்படுவதாகும். 'வள்பு' என்பது தோலிற் செய்த வாரை யுணர்த்துதல், “மாசற விசித்த வாருறுவள்பின் என்னும் புறநானூற்றனும் (50), “வள்புதெரிந்தூர்மதி வலவ” என்னும் ஐங்குறு நூற்றானும் (486) அறியப்படும். வாரைக் கொண்டு இறுக்கிக் கட்டப்படும் பறையினை அறைந்து ஊரார்க்குச் செய்தி யறிவிக்குந் தொழிலினை யுடையார் வள்ளுவரெனப் பட்டமை, “திருநாள் படைநாள் கடிநாள் என்றிப் பெருநாட் கல்லது பிறநாட்கு அறையாச் செல்வச் சேனை வள்ளுவ முதுமகன்”

"

எனப் பெருங்கதையுட் போந்த பகுதியானும் (2-32-34) நன்கு விளங்கா நிற்கும். இங்ஙனம் பறை யறையுந் தொழிலினை யுடையார் பண்டைக் காலத்திற் ‘பறையர்’ ஆயினதுபற்றி, அவரிற் சிறிது ஏற்ற முடையார்க்கு ‘வள்ளுவர்’ எனும் பெயர் வழங்க லாயிற்று; யாங்ஙனமெனிற், பிறர் தமக்கு நேரும் ஊழ்வினைப் பயன்களை நன்கறிந்துரைக்குந் தொழில், பின் நேர்வதனைப் பறை சாற்றி யறிவிக்குந் தொழிலோடு ஒப்புமை யுடையதாகலின் என்பது, கல்வியறிவு சிறிதுமில்லாப் பறையர்க்குட் கோணூற் புலமை நிரம்பிப், பிறர்தம் வினைப் பயன்களை அளந்துரைக்கும் வள்ளுவர், அவரின் வேறாய், அவர்க்குக் குருமாராய் அமைந்து பாராட்டுப்படுதல் இயற்கையேயாம்.

இனி, நம் பேராசிரியர் இங்ஙனம் வள்ளுவரெனப் பெயர் பெற்றதன் காரணம் உணராமையினாலோ, அல்லது அவரது சாதியிழிபினை மறைத்து அவர்க்கோர் ஏற்றங் கற்பிக்க விழைந்த கருத்தினாலோ, உலகத்தின் கண்ணுள்ள எல்லாச்ாதியினராலும், எல்லா மதத்தினராலும் ஒருங்கு தழுவப்படுஞ் செந்தமிழ் மாமறையை உலகத்தினர்க்கு வாங்கிய நல்லிசைப் புலவர் மாமணியை உயர்குலத்தவராகக் கூற வேண்டு மென்னுஞ் சாதிப் பற்றினாலோ, ஒருசாரார், ஆசிரியர் அரிய பெரிய பொருள்கள் அகத்தடங்கிய 'திருக்குறளை' உலகிற்கு வழங்கி யருளின வள்ளன்மை தோன்ற அவர்க்கு வள்ளுவர் எனும் பெயர் வழங்க

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_10.pdf/284&oldid=1579909" இலிருந்து மீள்விக்கப்பட்டது