உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 10.pdf/285

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

260

மறைமலையம் -10

லாயிற்றென் றுரை கூறினார். அச்சொல் அவர் கூறுமாறு வள்ளன்மைப் பொருள் பயப்பதாயின், அது வள்ளல்' என நிற்க வேண்டுமல்லாமல் 'வள்ளுவர்' என நில்லாது. தொல்லாசிரியர் நூலுரை வழக்கில் யாண்டும் வள்ளுவர் என்னுஞ் சொல் வள்ளன்மைப் பொருள் தரக் காணாமை யின், அச்சொல்லுக்கு யாங்கூறியதே உண்மைப் பொரு ளாதல் திண்ணமென்க.

66

இனி, மற்றுமொருசாரார் வள்ளுவன் என்னுஞ் சொல்லிற்குக் கற்றுணர்ந்தவன் என்பது தாதுப் பொருள்” என்று பொருளுரைத்தார். ‘வள்' என்னும் முதனிலையால் உணர்த்தப் படும் பல பொருள்களுட் 'கற்றுணர்தல்' என்னும் பொருளும் ஒன்றென்பது பழைய தமிழ்நூல் எதனாலும் பெறப்படவில்லை, அற்றன்று, ‘வள்' என்பது செழுமை என்னும்பொருளில் வருமாகலின், இவ்விடத்திற்கு ஏற்பக் ‘கல்விச்செழுமை' என்று பொருளுரைத்தலே எமது கருத்தாகுமெனின்; அது பொருந்தாது; ‘வள்’ என்னும் முதனிலையே கல்விச் செழுமையினை உணர்த்து வதன்று; அஃது ஈறு இடைநிலை முதலான உறுப்புகளோடு கூடி ஒரு சொற்றொடரில் நின்ற வழி, அச்சொற்றொடர்ப் பொருளுக்கு ணங்க ஒரோ ஒருகால் அப்பொருள் உணர்த்தாநிற்கும், இன்னும் அஃது அங்ஙனம் பொருளுணர்த்துவதும், ‘பம்’, அம்’ முதலான ஈறுகளோடு புணர்ந்து ‘வளப்பம்’, ‘வளம்' என்றாகிச், சொல் வளப்பம்”, “கல்வி வளம்' என வேறு சொற்களோடு இயைந்து நின்ற வழியேயாம். மற்று, வள்ளுவர் என்னுஞ் சொல்லின் முதனிலையாகிய 'வள்' என்பதற்கோ வேறு பொருளுளதாதலை முன்னரே காட்டினமாகலானும், அதன் ஈறு சாரியை முதலியன வேறுபட நிற்றலானும் அதற்கு அப் பொருளுரைத்தல் சாலாதென்க.

இனித், தமக்கு வளர்ப்புத் தந்தையாய் அமைந்த வள்ளுவத் திருமகன் கல்வியிற் சிறந்தவனாகலின், அவ னாலும், அஞ்ஞான்றிருந்த ஏனைத் தமிழாசிரியராலுந் தமிழ் இலக்கண இலக்கியங்களும், பலகலை நூல்களுங் கற்பிக்கப் பட்டு, இயற்கையிலே நுண்மாண் நுழைபுலமுடையரா யிருந்த நம் ஆசிரியர் கலை நிரம்பிய முழுமதியெனக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_10.pdf/285&oldid=1579910" இலிருந்து மீள்விக்கப்பட்டது