உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 10.pdf/286

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் ஆராய்ச்சி

261

கல்வியறிவும், இயற்கையறிவும் ஒருங்கு நிரம்பித் திகழ்ந்தனர். இவ்வாறு நம் ஆசிரியர் செந்தமிழ்ப் புலமைக்கு ஒரு வரம் பாய்ப் பொலிவுறுகின்ற காலத்து இவர்க்குக் கட்டிளமைப் பருவம் நிரம்பிற்று.

ஒரு

அப்போது, காவிரிப்பாக்கம் என்னும் ஊர்க்குத் தலைவராய் ஆயிரம் ஏர்வைத்து உழவுத்தொழில் நடாத்துவாரான வழித்துணைவர் (மார்க்க சகாயர்) எனப்பெயரிய வேளாண்செல்வர் தம்முடைய விளைபுலங்கள் வித்திடப்பட்டுப் பயிர்கிளைக்குங்காலத்து யாரும் அறியாமலே கருகியழிந்து முழுவதூஉம் பாழாய் விடுவது கண்டு மிகவருந்திப், “பல்லாயிர ஏழைமக்கள் பசிப்பிணியால் வருந்த வையிங்ஙனம் அழிகின்றனவே! என் செய்வோம்! இக்குறையினை நீக்கும் பெரியார் எவரேனும் உளராயின், அவர்க்கு என் அருமை மகளை வாழ்க்கைப்படுத்துவேன்” என்றெண்ணி, “இது நீக்கவல்லார் யார்?” என்று பலரையும் வினாவிவலரலானார். பின்னர் நம் ஆசிரியரது பெரும் புகழ் எங்கும் பரவவே, வழித் துணைவர் அவரை யணுகிப் பணிந்து, “அருட்பெருந்தகையே, ஏழைமக்கள் பலர் பிழைத்தற்கு உதவியாயுள்ள அடியேனது விளைபுலம் பயிர் இலை விரியுங்காலத்திற் கருகிப் பாழாய் விடுகின்றன! பலர் அதனால் மிகவறியராகிப் பசிப்பிணியாற் சொல்லுதற்கரிய துயர் உழக்கின்றனர்! அடிகளது அருட் கடைக்கண் நோக்கம் அதன்மேற் படுமாயின், அக்குறை தீர்ந்து அது பலர்க்கும் பயன்படும்” என்று தமது பெருங்குறையினைத் தெரிவித்துக் கொண்டனர். அதனைச் செவியேற்ற ஆசிரியர் அச்செல்வரின் கசிந்த வேளாண்மை யுள்ளப்பெற்றி யுணர்ந்து, தாமே ஆவ்வூர் சென்று, அவ்விளைபுலங்களை நோக்கி, அவை தம்மை இறைவன் திருவருள் நிலையமாக நினைந்து,

“வித்தும் இடல்வேண்டுங் கொல்லோ விருந்தோம்பி மிச்சில் மிசைவான் புலம்”

ாவினை

(குறள் 85)

என்னுந் திருக்குறட் மொழிந்தருளினார். ஆசிரியரது கடைக்கண் நோக்கம் பட்ட அப்பொழுதே அவ்விளைபுலங் கொழுமையுற்று இடையூறு தீர்ந்து பெரு விளைச்சல் விளைந்தன. அதனாற் பல்லுயிர்களும் பசிப்பிணி நீங்கி மகிழ்ந்தன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_10.pdf/286&oldid=1579911" இலிருந்து மீள்விக்கப்பட்டது