உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 10.pdf/287

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

262

மறைமலையம் 10

ஆசிரியரது அருட்பெருந்தகைமையினையும் அவர் தம் பேராற்றலினையும் நேரேகண்ட வழித்துணைவர் பெரிய தொருவியப்பும் உவகையும் நிரம்பிய உள்ளத்தினராய் அவரைப் பணிந்து, “பெருமானே, அடியேற்கு நேர்ந்த இப்பெருங்குறையினை நீக்குவார்க்கு என்மகளை வாழ்க்கைப் படுத்துவேன் என்றோர் உறுதி செய்துளேன்” எனத் தாங் கொண்ட குறிக்கோளைத் தெரிவித்தார். அஃது உணர்ந்த ஆசிரியர் "நும்மகள் யாம் தரும் இருப்புக் கடலையினைச் செவ்வையாக அவைத்துத் தருகுவளாயின், யாம் அவளை மணஞ்செய்துகொள்ள ஒருப்படுவோம்" என மொழிந்தனர். இருப்புக் கடலை என்பன இரும்பினாற் செய்தவைகள் அல்ல. கடலையிலேயே எளிதில் வேகாத ஒரு வகையே இருப்புக் கடலையென வழங்கப்பட்டு வருகின்றது. வழித் துணைவரும் அக்கடலையினைப் பெற்றுக் கொண்டு போய்ப் பாப்பம்மையார் (வாசுகி) என்னுந் தம் அருமைப்புதல்வியார் கையிற் கொடுத்து, நாயனாரது உள்ளக்கிடக்கையினை அறிவிப்ப, அந்நங்கையார் அத்துணைப்பெரிய அறிவாளரே அவைத்தற்கு இசையும் எனக் கருதி விடுத்தனராகலின், இவை அவர் குறித்தவாறே வெந்து பதமாகும் வந்து பதமாகும்" என நி என நினைந்து, பிறிதுரையாது, அவைதம்மை வாங்கி மணமுஞ் சுவையும் பெருகச் சமைத்து, ஆசிரியர்க்குப் படைத்திட்டார். அது கண்ட நம் நாயனார் அவ்வருமை நங்கையாரை மணம்புரிந்தருளி, அவருடன் பூவும் மணமும் போற், பாலுந்தேனும்போற், பழமும் சாறும்போல் ஒருங்கிருந்து இல்லறம் நடாத்தி

66

வை

வரலானார். இவர் நடாத்திய இல்லறவாழ்க்கையின்

மாட்சியினைப் பின்னே எடுத்துக் காட்டுவாம்.

அடிக்குறிப்புகள்

1.

2.

3.

4.

செந்தமிழ், 1,2.

இருக்குவேதம்.

See The Sanscrit English Dictionary of Apte.

திருமந்திரம், 86

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_10.pdf/287&oldid=1579912" இலிருந்து மீள்விக்கப்பட்டது