உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 10.pdf/289

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

264

66

மறைமலையம் - 10

-10

"என்றும் ஒருவுதல் வேண்டும் புகழொடு நன்றி பயவா வினை”

(குறள் 652)

என்றும் அவர் அருளிச் செய்த திருக்குறட் பாக்களால் இனிதறியப்படும்.

இனிப்,பல்பண்ட

இனிப், பல்பண்டங்களை விலைகொண்டு விற்கும் வாணிக வாழ்க்கையை நடாத்திப் பொருள் பெறலா மெனின், எந்நேரமும் உயர்ந்த பொருட்பயன் ஆராய்தலிலுந், தமக்கு முன்னிருந்த சான்றோர் அருளிய நூல்களைப் பயிறலிலும், அவற்றைப் பயின்றதன் பயனாக எல்லா அறிவும் எல்லா முதன்மையும் ஒருங்குடைய இறைவன் திருவடிகளை ஓவாது தொழும் அருந்தவப் பயிற்சி செய்தலிலுங் கருத்து ஈடுபட்டு நிற்குந் தமக்குப், பலநாடு சென்று பல பண்டங்கள் தேடிக்கொணர்ந்து விற்கும் வாணிக வாழ்க்கையும் ஆகாதென நன்குணர்ந்தார். மேலும், வாணிகம் நடாத்துதலிற், பிறருடைய பொருளைத் தம் பொருள்போற் கருதும் நடுவு நிலை வாய்த்தலும் அரிதெனக் கண்டார். இவரது மனப்பான்மை இப் பெற்றியதாதல்,

"நுண்மாண் நுழைபுலம் இல்லான் எழினலம் மண்மாண் புனைபாவை யற்று”

(குறள் 407)

எனவுந்,

"தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக் கற்றனைத் தூறும் அறிவு”

(குறள் 396)

எனவுங்,

"கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன் நற்றாள் தொழாஅ ரெனின்”

(குறள் 2)

எனவுந்,

66

'தவஞ்செய்வார் தங்கருமஞ் செய்வார்மற் றல்லார் அவஞ்செய்வார் ஆசையுட் பட்டு”

(குறள் 266)

6

எனவும்,

66

வாணிகஞ் செய்வார்க்கு வாணிகம் பேணிப்

பிறவுந் தமபோற் செயின்”

(குறள் 120)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_10.pdf/289&oldid=1579914" இலிருந்து மீள்விக்கப்பட்டது