உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 10.pdf/290

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் ஆராய்ச்சி

எனவும் அவர் அருளிச் செய்தவாற்றால் நன்கறியப்படும்.

265

ஆகவே, நாயனார் தமதில்லற வாழ்க்கையைச் சுருங்கிய செலவில் ஆரவாரமின்றி நடத்தினாற், பொருள் வருவாயை மிகுதியாக நாடவேண்டுவதில்லை யெனவும், பொருள் வருவாயை மிகுதியாக நாடாதபோது வாணிகஞ் செய்தலும் பெருஞ் செல்வரின் கீழ் ஊழியஞ் செய்தலும் வேண்டா வெனவும் முடிவு செய்தார்; இஃது,

66

'ஆகா றளவிட்டி தாயினுங் கேடில்லை

போகா றகலாக் கடை

(குறள் 478)

என அவரருளிச்செய்த திருக்குறட் செய்யுளால் இனிது விளங்கா நிற்கின்றது.

6

வ்வாறாக ஊழியமும் வாணிகமுந் தமக்கு ஆகா எனக் கண்டபின், தமது எளிய வாழ்க்கைக்கு இசைவதாவது, ஆடை நெய்துவிற்று, அதில்வருஞ் சிறியதோர் ஊதியங்கொண்டு தாமுந் தம்மனைவியாரும் இல்லறம் நடாத்துதலேயாம் என முடிவு செய்தார். இங்ஙனம் முடிவு செய்தபின், நாடோறும் 'ஏலேலசிங்கர்' என்னும் வணிகர் பாற் சென்று, அவரிடமிருந்து ஐந்து பணத்திற்கு நூல் வாங்கி அதனை ஆடையாக நெய்து, தமது அன்றாட வாழ்க்கைச் செலவுக்கு வேண்டிய அளவு அதனை ஊதியத்துக்கு விற்று, ஊதியத்தை மனைச்செலவுக்கும், மிச்சம், ஐந்து பணத்தை அடுத்தநாள் நூல்வாங்குதற்கு முதலுமாக வைத்துத், தம் அருமை மனைவியாருடன் காதலன் பிற்றிளைத்த படியே, தமது அருந்தவ வொழுக்கத்தைப் பொருந்துமுறையில் ஆற்றிவந்தார். நாயனார் செய்தது நெய்தற் றொழிலேயென்பது, “பூவி லயனும் புரந்தரனும் பூவுலகைத் தாவி யளந்தோனுந் தாமிருக்க - நாவில் இழைநக்கி நூனெருடும் ஏழையறி வேனோ குழைநக்கும் பிஞ்ஞகன்றன் கூத்து'

وو

ச்

என்னும் இவரது தனிச்செய்யுளினால் அறியப்படும். இச் செய்யுள் தமிழ்நாவலர் சரிதையிற் காணப்படுகின்றது.

இங்ஙனம் இல்லறம் என்னுந் தீம்புனல்யாறு ஒரு புறமுந், துறவறம் என்னுந் தண்புனல் யாறு மற்றொருபுறமும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_10.pdf/290&oldid=1579915" இலிருந்து மீள்விக்கப்பட்டது