உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 10.pdf/291

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

266

மறைமலையம் 10

வந்துநிறையும் ஒரு மலர்வாவிபோல, நாயனார் இருவகை யொழுக்கமும் ஒருவகையிற்கொண்டு தமக்கும் பிறர்க்கும் பெரிதும் பயன்படுதலுடையராய் வாழ்ந்து வரலானார். அதனோடு அஞ்ஞான்று தமிழிலும் வடமொழியிலும் வழங்கிய அரிய பெரிய நூற்பொருள்களை யெல்லாம் ஆழ்ந்து நுண்ணிதின் ஆராய்ந்தறிந்து கல்விக் கடற்கோர் எல்லையாயும் விளங்கினார் நாயனார். இங்ஙனந் தமிழ்ப் பேராசிரியராய் இவர் விளங்குதலைக் கண்ட கலைவல்லாரெல்லாம், இவர்தந் திருவடிகளை அடைந்து இவர் அறிவுறுத்தும் அரும்பொருள் அறிவுரைகளைச் செவியாரப் பருகித், தம்முளத்தை அவ்வறிவுப் பேரமிழ்திற் றோய்விக்கும் விழைவு பெரிதுடையராய்க் குழுமினார். அதனால், தவப் பெருந் தலைவரான நாயனார், மக்களுயிர்க்கு இம்மை மறுமையில் உறுதி பயப்பவான ஒவ்வொரு பொருளினையும், பாலைத் துழாவித் துழாவிக் காய்ச்சி அதன் பரப்பனைத்தினையுஞ் சுருங்கத் திரட்டி மாற்றுயர்ந்த ஒரு சிறு பொன்வள்ளத்தில் நிறையவைத்தா லென்ன, மிகச் சில விழுமிய சொற்களால் மிகச்சிறிதாய் நறுவிதாய் அமைத்த குறட்பாவிற் செறிந்து, அங்ஙனஞ் செறிந்த அவ் வரும்பெரும் பொருளை யெல்லாற், தம்மை யணுகிய மாணாக்கர்க்கு உளங்கொளத் தேக்கும் பெருதவியினைச் செய்து வரலானார்.

பிறரெல்லாம்

எண்ணுவதொன்றுஞ் சொல்லுவது மற்றொன்றுஞ் செய்வது பிறிதொன்றுமாகத் தாமே தம்மிற் பெரிதும் முரணி நிற்பர். அங்ஙனந் தாமே முரணி நிற்றலால், அவரெல்லாந் தமது வாழ்க்கையினைச் செவ்வனே நடத்தமாட்டாமற் றாம் பெரிதுந் துன்புறுதலுடன், தம்மைச் சார்ந்தா ரத்தனைபேரும் மிக்க துன்பத்தினை எய்துமாறுஞ் சய்வர். மற்று, நாயனாரோ தாம் நன்கு ஆராய்ந்து நினைந்ததனையே பிறர்க்குஞ் சொல்லினர்; தாமுஞ் செய் தனர். நாயனார் அறங்களுள் மிகச் சிறந்ததெனத் தெளிந்தது ஓருயிரையுங் கொலை செய்யாத கொல்லா அறமே யாம்; தாங் ல கண்ட அவ்வுண்மையினையே,

66

“ஒன்றாக நல்லது கொல்லாமை மற்றதன் பின்சாரப் பொய்யாமை நன்று”

(குறள் 323)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_10.pdf/291&oldid=1579916" இலிருந்து மீள்விக்கப்பட்டது