உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 10.pdf/292

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் ஆராய்ச்சி

267

என்று தாம் அருளிச்செய்த திருக்குறளிலும் பலரறியச் சொல்லினர். அங்ஙனஞ் சொல்லியதற் கேற்பவே, உயிரழிவுக் கிடமான மற்றைத் தொழில்களெல்லாஞ் செய்தலை விட்டு, உயிரழிவுக்கு இ மில்லா நெய்தற்றொழிலையே செய்து போந்தனர்.

னிக்,கொல்லாமைக்கு அடுத்தபடியிலே நாயனார் சிறந்த அறமெனக் கொண்டது பொய் கூறாமையே யாம். வாணிகஞ் செய்தலில் எங்ஙனமேனும் பாய் வந்து நுழையு மாதலால், அது செய்தற்குத் தமதுளம் ஒருப்படாராய்த் தாம் அன்றாடம் நெய்த ஆடையினை ன் விலைசெய்து பெற்ற சிறுபொருள் கொண்டே தமது வாழ்க்கையினை வளனுற நடாத்திவந்தார். இவர் இவ்வாறு சிறிய வருவாய்ப் பொருள் கொண்டு மனையறம் நடாத்துதற்கு, இவர் தம் மனைவியார் மிகவும் மனம் ஒத்து நடந்தவராகல் வேண்டும்; இல்லை யானால், நாயனார் தாங்கண்ட அறநெறியிற் செல்லுதல் இயலாது.

பார்மின்! இஞ்ஞான்றை மாதரார் பொற்சரிகை மிடைந்த பட்டாடை உடுப்பதிலுங், கதிரொளி மிளிரும் மணிக்கலன் பூண்பதிலும், அறுசுவைமிக்க நொறுவைகள் உண்பதிலும், நறுமலர் புழுகு நாளும் அணிதலிலும், நாடகக் காட்சியும் நகைச்சுவைப் பாட்டும் நாடொறுங் கண்டு கேட்டுக் களிப்பதிலும் அடங்கா வேட்கையுடையராய்த், தங்கணவரின் வருவாய்க் குறையினைச் சிறிதுங் கருதிப்பாராது, அவரைப் பெரும்பொருள் காணரும்படி ஓவாது வருத்தி வருகின்றனர்! அதனால், ஆடவரிற்பலர், தீதும் பழியும் பாராது, தமது தகுதிக்கும் நிலைக்கும் ஏற்ப வருவாய்ப் பொருளளவில் அமைதிபெறாது, வரம்பு கடந்து சென்று, பிறரை ஏழை எளியரென்றும் நினையாது பலவகையால் நெருக்கி, அவரிடமிருந்து பிழிந்தெடுப்பது போல் எடுத்துப் பெற்ற தொகைகொண்டு தம் மனைவியர் வேண்டுமாறெல்லாம் நடந்து அவரை உவப்பிக்கின்றனர்! இவ்வாறு தொடர்பாகத் தீநெறியிற் பொருள் தொகுக்கும் இவர்கள், தமக்கு மேலுள்ள தலைவர்களால் தமது குற்றங் கண்டுபிடிக்கப்பட்டுச் சிறையிடப்படுதலும் உண்டு; அதற்குத் தப்பினால் தம்மாற் பெரிதுங் துன்புறுத்தப்படுங் குடிமக்களிற்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_10.pdf/292&oldid=1579917" இலிருந்து மீள்விக்கப்பட்டது