உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 10.pdf/293

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

268

மறைமலையம் - 10

றீயராற் கொலை செய்யப்படுதலும் உண்டு; அதற்குந் தப்பினால் அச்சத்தாலுங் கவலையாலும் ஓயாமுயற்சியாலும் உள்ளம் வெந்து, என்புருக்கி நோய் முதலியன கொண்டு, ஆற்றொணாத் துன்புழந்து காலம் முதிராமுன்னரே மாய்தலும் உண்டு. எவ்வாறேனும் பிறன் கைப்பொருளை வெஃகி அறனல்ல செய்பவர் கெட்டொழிதல் திண்ணம்; அவரேயன்றி அவரது குடிமுழுதும் மாயுமென் பதனையும் நாயனாரே,

“நடுவின்றி நன்பொருள் வெஃகிற் குடிபொன்றிக் குற்றமும் ஆங்கே தரும்”

(குறள் 171) என்று அருளிச் செய்திருக்கின்றார். இங்ஙனமாக, ஆடவர்தந் தீவினைக்கு அவர்தம் மனைவியரின் அடங்காப் பேரவாவே காரணமாயிருத்தலால், அவர்தம் நல்வினைக்கும் அவர்தம் அவாவின்மையே காரணமாயிருக்கின்றது. இவ்வுண்மை

யினை நாயனாரே,

66

'மனைத்தக்க மாண்புடைய ளாகித்தற் கொண்டான் வளத்தக்காள் வாழ்க்கைத் துணை

என்றும்,

“மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை

(குறள் 51)

6

எனைமாட்சித் தாயினும் இல்”

(குறள் 52)

என்றும்,

“இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென் இல்லவள் மாணாக்கடை

(குறள் 53)

என்றும் நன்கு விளக்கியிருத்தல் காண்க. இங்கே கூறியது கொண்டு மகளிரெல்லாருந், திருவள்ளுவரின் மனைவியாரைப் போல், மிக்க எளிய நிலையிலேயே காலங்கழிக்க வேண்டு மென்பது எமது கருத்தாகக் கொள்ளற்க. மகளிராவார் தங் கணவரின் வருவாய்க்குத் தக்கபடியாகவும், உயர்ந்த முறையிலோ, அன்றி நடுவானமுறையிலோ, அன்றி எளிய நிலையிலோ மனப்புழுக்கமின்றித் தங்கொழுநரோடு ஒத்து வாழ்க்கை செலுத்தல் வேண்டுமென்பதே எமது கருத்தாவதாம். தீதின்றி வந்த பெரும்பொருள் உளதாயின், அதனைக் கற்றார்க்கும் வறியார்க்கும் ஏழைமக்கட்குங் கொடுத்துதவிசெய்வதுடன்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_10.pdf/293&oldid=1579918" இலிருந்து மீள்விக்கப்பட்டது