உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 10.pdf/294

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் ஆராய்ச்சி

269

தாமும் உயர்ந்த முறையில் ஐம்புலநுகர்தலிற் குற்றம் ஏதும் இல்லை. பெருஞ்செல்வர் செயல் இங்ஙனம் நடைபெறற் பாலதென்பதனை நாயனாரே,

"வைத்தான்வாய் சான்ற பெரும்பொருள் அஃதுண்ணான் செத்தான் செயக்கிடந்த தில்”

எனவுங்,

“கொடுப்பதூஉந் துய்ப்பதூஉம் இல்லார்க் கடுக்கிய கோடிஉண் டாயினும் இல்”

எனவும்,

“ஏதம் பெருங்செல்வந் தான்றுவ்வான் தக்கார்க்கொன் றீதல் இயல்பிலா தான்”

எனவுந் ஓதுமாற்றால் நன்கு தெளிந்துகொள்க.

(குறள் 1001)

(குறள் 15)

(குறள் 1006)

அஃதொக்கும், மிகுந்த செல்வம் உடையாருந் தமது பெரும் பொருளை அற்றார்க்கும் அலந்தார்க்கும் பயன் படுத்துதலே முறையாமல்லது, உயர்ந்த ஐம்புல இன்பங்களைத் தாம் நுகர்தலிலும் அதனை அழித்தல் நன்றாமாறு யாங்ஙன மெனிற், கூறுதும். அற்றார் அழிபசி தீர்த்தலும், அவருடுக்கக் கூறை கொடுத்தலும், அவர் மேலு மேலுந் தம் வயிறு கழுவுதற்கு ஆவனசெய்து வைத்தலும் எல்லாம் அவரது உடம்பினை ஓம்புதற்குப் பயன்படும் அவ்வளவே யல்லாமல், அவரது அறிவினை வளர்த்து அதனை ஒளிபெறச் செய்தற்குப் பயன்படுதல் கண்டிலமே. அதனால், அவரது உடம்பினை மட்டும் பேணுதற்குத் தக்கதாகப் பொருளைப் பயன்படுத்தும் ஒரு துறையிலேயே செல்வர் தமது முயற்சியினை ஊன்றிச் செய்தல் நிலையான பெரும் பயனைத் தரவல்லதன்று. அவரது அறிவு வளர்ந்து ஒளிர்தற்கான பல கலைத் துறை களிலும் அவர்களைப் பயிற்றுதலிலுந் தம் பொருளையும் முயற்சியையும் பயன்படுத்துதலே அவர் தமக்கு இன்றியமை யாத அறமுங் கடமையுமாகும். அவ்வாறு ஏழை யெளியவர் களைப் பல்வகைக் கல்விகளிலும் பயிற்றி, அவரை அறிவிலும் முயற்சியிலும் மேம்படச் செய்து விட்டால், அவர் பின்னர்ப் பிறருதவி வேண்டாது தமது வாழ்க்கையினைத் தாமே இடர்ப் படாது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_10.pdf/294&oldid=1579919" இலிருந்து மீள்விக்கப்பட்டது