உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 10.pdf/295

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

270

மறைமலையம்

10

நடாத்தித் தமக்கும் பிறர்க்கும் பயன்படுவர். ஆகவே, செல்வத்தின் அளவுக்கு ஏற்றபடி அதில் ஒரு பகுதியை அற்றார் அலந்தார் அழிபசி தீர்த்தற்கும், அவர் பலதுறைக் கல்வியில் தேர்ச்சி பெறுதற்கும் பயன்படுத்தி வைத்து, மிச்சத்தைத் தாம் ஐம்புலவின்பம் நுகர்தற்குங், கருவி நூல் வீட்டு நூல் ஓவாது கற்றுப் புலமை நிரப்புதற்குந், திருக்கோயில்கடோறுஞ் சென்று இறைவனை வழிபட்டுப் பிறவியைத் தூய்தாக்குதற்கும் பயன்படுத்திக் கொள்ளல் வேண்டும். ஐம்புல இன்பங்களை நுகராக்கால் எவர்க்கும் மனக்கிளர்ச்சி குன்றிவிடும்; மனக் கிளர்ச்சி குன்றவே அறிவு மழுங்கும், முயற்சி அவியும்; அறிவும் முயற்சியுங் குறையவே கருவிநூல் வீட்டுநூல் கற்றலில் அவா வுண்டாகாது; அவை யிரண்டுங் கல்லாக்கால் இவ்வுலக வாழ்க்கை இனிது நடவாமையோடு இறைவனை யுணர்ந்து அவனை வழிபடுதற் கண்ணுங் கருத்துச் செல்லாது. ஆதலாற் புலன்களை ஒழுங்கான முறையில் நுகர்தல் மக்களின் இம்மை மறுமை வாழ்க்கைக்குப் பெரிதுந் ணைசெய்வதேயாகும். என்றாலும், ஐம்புல நுகர்ச்சியிலேயே முழுதும் உணர்வு இழுப்புண்டு, அதனின் விழுமியவான கல்விப் பயிற்சியினையும் அதன் பயனான கடவுள் வழிபாட்டினையுங் கைவிடுதல் இழுக்காமென்பதே திருவள்ளுவ நாயனார் கருத்தாகும். இது,

“சிற்றின்பம் வெஃகி அறன்அல்ல செய்யாரே மற்றின்பம் வேண்டுபவர்”

(குறள் 173)

ங்

எ ன்று அவர் ஓதுமாற்றான் அறியப்படும். ஆகவே, ஐம்புல இன்பங்களை ஒழுங்கான முறையில் நுகர்ந்து, அந் நுகர்ச்சியின் வாயிலாக வரும் அறிவையும் முயற்சியையு கல்வியிலுங் கடவுள் வழிபாட்டிலும் பிறர்க்குதவி செய்த லிலுஞ்செலுத்தல் வேண்டுமென்பதே எமது கருத்தாகக் கொள்க.

மேற்சொல்லியவாறு நாயனாரின் மனைவியார் தமது மிகச் சிறிய வருவாய்க்குத் தக்கபடி தங் கணவரோடுஉளம் ஒருமித்துத் தமது வாழ்க்கையை எல்லாவகையிலும் இனியதாகவே நடத்தி

வந்தனரென்பது,

“அடிசிற் கினியாளை அன்புடை யாளைப் படுசொற் பழிநாணுவாளை- அடிவருடிப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_10.pdf/295&oldid=1579920" இலிருந்து மீள்விக்கப்பட்டது