உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 10.pdf/296

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் ஆராய்ச்சி

பின்றுஞ்சி முன்னுணரும் பேதையை யான்பிரிந்தால் என்றுஞ்சும் என்கண் எனக்கு’

271

என்று நாயனார் அவர் இறந்துபட்ட ஞான்று நெஞ்சம் நெக்கு நெக்குருகிப் பாடிய செய்யுளால் நன்கறியப்படும்.

உடம்பினை நோய் அணுகாமற் பாதுகாத்து, அதனால் அறிவும் முயற்சியும் மிக்கு இன்பந் துய்த்தற்குப் பேருதவி செய்வது சவ்விய முறையில் அமைத்த உணவேயாகும். நறுவிதாகச் சமைத்த உண்டியே உடம்பிற்கும் உயிருக்குஞ் செழுமையினைத் தந்து, நோய் விலக்கும் மருந்தும் ஆகி, ன்பம் இன்ன தென்பதனை மக்களுக்கு முதன்முதற் புலப்படுத்துவ தாகும். ஈன்றணிய சிறுமகவு தாய்தருந் தீஞ்சுவைப்பாலைப் பருகுங்கால் தன் பசித்துன்பத்தை மறந்து எத்துணை மகிழ்ச்சி யுடையதாய்க் காணப்படுகின்றது! கீழோராயினும் மேலோராயினும் இன்சுவை வாய்ந்த உணாப்பொருள்களை அருந்துங்கால் அவர் எவ்வளவு உள்ளந் தளிர்க்கின்றனர்! சாறற்ற சக்கை போன்ற பண்டங் களையுங், காரமுங் கைப்புங் கசப்பும் மிகுந்த உணவுகளையும் ஒரோவொருகால் தின்ன நேர்ந்தக்கால் அவரெல்லாம் எத்தகைய மனக்கொதிப்பு உடையராகிச் சினமும் வருத்தமும் எய்து கின்றனர்! சுவையறியா மக்களுக்கும் வைக்கோலைத் தின்னும் மாடுகளுக்கும் ஏதேனும் வேற்றுமையுண்டோ? சிறிதுமில்லை. சுவையுடைய நறும்பண்டங்களைக் கூர்ந்து பார்த்து அமைதியாய் உட்கொள்பவர் எவராயினும் அவர்க்கு நுண்ணறிவு மிகும், அவர்க்கு நோய் வராது, அவர் நன்முயற்சி வாய்ந்தவரா யிருப்பர். உணவுக்கும் அறிவுக்கும் நெருங்கிய தொடர்பு உளது. அறிவுமிக்காரெல்லாம் இன்சுவை கனிந்த உணவினையே சிறிதாய் அமைதியாய் அயின்று உள்ளம் மகிழ்பூத்திருப்பர். இதனாலன்றோ நாயனார் தமக்கு நறுஞ்சுவை யுணவு அமைத்த தம் மனைவியாரின் அன்பையும் அறிவையும் அருந்திறனையும் முதன்முதல் வியந்தெடுத்துக் கூறினார். தங் கணவர்பாற் காதலன்புடைய மனைவியர் ஒருசிலரே, தங் கணவரின் உடலோம்பவும் அவர் உள்ளம் உவக்கும் வகையா னெல்லாம் இனிது ஒழுகவும் நன்காராய்ந்து உணவு அமைப்பதும், இல்வாழ்க்கை நடாத்துவதுஞ் செய்வர். அத்தகைய பேரன்பு வாயாத மகளிரோ அங்ஙனஞ் செய்ய மாட்டுவார் அல்லர். இதனை நாயனாரே,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_10.pdf/296&oldid=1579921" இலிருந்து மீள்விக்கப்பட்டது