உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 10.pdf/297

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

272

மறைமலையம் 10

“இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென்

இல்லவள் மாணாக் கடை

(குறள் 53)

என நன்கெடுத்து வற்புறுத்தினார். ஆகவே, மகளிர் உணவு சமைத்துத்தரும் முறையிலிருந்து அவர்தங் கணவர்பால் எவ்வளவு வைத்துளாரென்பது தெள்ளிதின் அறியப்

அன்பு படும்.

மேலுந், தங் கணவர்பாற் காதலன்பு பூண்டு ஒழுகும் ஒரு மங்கை, தன் உறவினர் மாட்டும் அண்டை அயலார் மாட்டும் முறையான அன்பு வைத்து அவரெல்லாம் உவக்குமாறு அடக்க வொடுக்கத்துடன் நடப்பள். ஏனெனில், அவள் இந்நடையிற் சிறிது பிசகினும், எல்லாரும் அவளைக் கொண்டான்மேற் பழி கூறாநிற்பர். அங்ஙனந் தன்னால் தன் கணவன் பழிச்சொற்கு ஆளாக மனம் பொறாளாய் அவள் தன்னைப் பலவகையிலுங் காத்துக் கருத்தாய் அமைதியாய் அறிவாய் நடந்துகொள்வ ளென்னுங் குறிப்பு, நாயனார்தம் மனைவியார் நடையினை வியந்து "படுசொற் பழி நாணுவாளை ள என்று நுவன்ற வாற்றால் தெளியப்படுகின்றது.

று

இனி, நூலாராய்ச்சியிலும், நூலியற்றுதலிலும், மாணாக்கர்க்கு நூற்பொருள் அறிவுறுத்துதலிலுந், தவ வொழுக்கத்திலும், ஆடைநெய்து விற்றலிலும், விற்றுக் கொணர்ந்து சிறு பொருளால் இல்வாழ்க்கையைச் சிறக்க ாத்துதலிலும் நாள் முழுதும் இரவின் முற்பாதிவரை யிலுந் தொடர்பாக முயன்று அயர்வுற்ற நாயனார்க்கு அவ் வயர்வுதீர்த்து, அவரை நன்றாகத் துயிற்றுதற் பொருட்டு அவர்தந் திருவடிகளை அவர்தம் மனைவியார் மெல்னெத் தடவிக் காடுத்து அவர் இனிது துயின்றபின் நாந்துயின்று, அவர் துயில்நீங்கி விழிப்பதன் முன்தாம் விழித்தெழுந்த முறைகளை யெல்லாம் நாயனார் சுருங்கிய சொல்லில் விளங்கக் கூறியிருப்பது காண்க. இச்செய்யுளில் தம் மனைவியார் பகலிலும் இரவிலும் இல்லற வொழுக்கத்தைப் பேரன்பின் வழியராய் நின்று தாமும் பிறரும் வியந்து பாராட்டுமாறு நடாத்திய அருந்திறன் எத்துணை நுண்ணிதாக எத்துணைச் சுருக்கமாக எடுத்து நுவலப்பட்டிருக்கின்றது!

இவ்வாறு நாயனாரும் அவர்தம் மனைவியாரும் பழமுஞ்சுவையும்போல், மலரும் மணமும்போல், உயிரும் உடலும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_10.pdf/297&oldid=1579922" இலிருந்து மீள்விக்கப்பட்டது