உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 10.pdf/298

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் ஆராய்ச்சி

273

போற் காதலன்பால் ஒருங்கொத்து இல்வாழ்க்கை நடாத்து கின்றுழி, அவ்வாழ்க்கையின் நிகழ்ச்சிகள் சில அவர்தம் அன்பின் மிகுதியினைக் காட்டும் அடையாளங்களாகத் தமிழறிஞர்களால் தொன்றுதொட்டுக் கூறப்பட்டு வருகின்றன. அவை தம்மை இங்கெடுத்து வரைவாம்.

நாயனார் மனைவியாருடன் கூடி இல்வாழ்க்கை நடாத்தும் அருமைப் பாட்டினைத் தமிழ்நாட்டவ ரெல்லாம் வியந் தெடுத்துப் பேசுதலை அறிந்த தமிழ்வல்லார் ஒருவர், நாயனாரை அணுகி அவரை வணங்கி, “ஐயனே, இல்லற வாழ்க்கையோ துறவறவாழ்க்கையோ எது சிறந்தது? அதனை அடியேற்குப் புலங்கொள அறிவுறுத்தருளல் வேண்டும்" என்று வேண்டினார். அவ்வேண்டுகோளைச் செவியேற்ற நாயனார், அவர்க்கு அவ்வுண்மையினைச் சொல்லாற் சொல்லி விளக்கு தலினுஞ் செயலாற்காட்டி விளங்கவைத்தலே உண்மையை உள்ளபடி காட்டுமெனக் கருதி, அவரைச் சிலநாட்கள் தம்முடன் இருக்கு மாறு கற்பித்தார். அவ்வாறே வந்த அறிஞர் நாயனா ரில்லத்தில் விருந்தினராய் இருந்து வருகையில், ஒருநாட்காலையில் நாயனார் தமக்குப் பழஞ்சோறு இடுகவெனத் தம் மனைவியார்க்குக் கட்டளை இட்டனர். அங்ஙனமே அம்மையார் அவர்க்குப் பழையது பரிமாறிவைத்து, அவரதனை உட்கொண்டபின் வாய் கழுவுவதற்காகத் தண்ணீர் முகந்து கொண்டு வரும்பொருட்டுக், கிணற்றண்டை சென்று, அதனுள்ளிருக்குந் தண்ணீரைத் தாம்புக்கயிறு கொண்டு ஒரு குடத்தால் முகந்து மேலிழுக்கும் நிலையிலிருந்தார். அப்போது சடுதியில் நாயனார், “பெண்ணே, சோறு சுடுகிறது! விசிறி கொண்டுவா! எனக் கூவியழைத்தார். அச்சொற் கேட்ட அம்மையார், கிணற்றின் அடியிலிருந்து அரைவாசி மேலிழுத்த குடத்தை முழுதும் மேல்இழாமல் அந்நிலையே விட்டுத், துடித்தோடி வந்து ஒரு விசிறி கொண்டு வீசினார்; வீச அப்பழஞ் சோற்றின் மேல் ஆவி குமுகுமுவென் றெழுந்தது. அதன்பின் அம்மையார் மீண்டுங் கிணற்றண்டை போய்ப் பார்க்கத், தண்ணீர்க் குடமுங் கயிறுங் கிணற்றுள் விழாமல் விட்ட நிலையிலேயே நிற்பதனைக் கண்டு வியந்து, அதன்நீரை நாயனார் கைக்கு நீட்டினார். இவ்விரண்டு நிகழ்ச்சிகளையும் நேர் இருந்து கண்ட அவ்விருந்தினர்க்கு, அம்மையார் தாம் பரிமாறியது குளிர்ந்த பழங்சோறே ஆதலை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_10.pdf/298&oldid=1579923" இலிருந்து மீள்விக்கப்பட்டது