உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 10.pdf/302

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் ஆராய்ச்சி

277

வெள்ளியும் எடுத்து வந்து வைத்திட்டார். அவ்வணிகர் அமைதியாக உணவுகொண்டு, ஐம்பது காசுகளுடன், பழங்கள் வருவித்தவர்பாற் சென்று, நயத்தவிலையில் தாம் வேண்டியவளவு பழங்களை வாங்கிக் கொண்டார். இவர் வாங்கிக்கொண்டபின், மற்றை வணிகர் ஒவ்வொருவராய் ஒருவர்பின் ஒருவராய் வந்து பழங்களை வாங்குவாராயினர். வருவித்த பழங்கள் விலையாக விலையாக மிச்சமுள்ள பழங்கள் விலை ஏற்றப்பட்ட L_68T. கடைசியாக வந்தவர்க்குப் பழங்களே கிடைக்கவில்லை. ஆகவே, முதன்முதல் வந்து நயத்தவிலைக்குப் பழங்களை வாங்கிக் கொண்ட வணிகரைப் பார்த்து மற்றவர்கள் பொறாமைப் பட்டுத், தக்க நேரத்தில் தாம் வரக்கூடாமைக்குக் காரணந் தம் மனைவி மாரே எனச் சொல்லி ஒருவரோடொருவர் வருந்த லாயினர். ஒரு வணிகர், “நான் ஏழு மணிக்கு வெளியே போகல் வேண்டுமெனச் சொல்லியும், என்மனைவி ஏழுமணிக்குத் தான் மெல்ல எழுந்து சிற்றுண்டி செய்து எட்டுமணிக்குப் படைத்தாள்; அதனால் யான் பிந்திப்போனேன்" என்றனர். மற்றொருவர், “எதற்காக இவ்வளவு காலையிற் போகல் வேண்டும்? எட்டுமணிக்கு வழக்கம்போற் போனால் என்ன? நீங்கள் போவதற்குள் மற்றைக் கடைக்காரர் வரமுடியுமா? அவரவர் வீட்டிற் பெண்பிள்ளைகளுங் காலைக்

கட

ன்களை முடித்துக் கொண்டுதானே அடுக்களையிற் செல்வார்கள்?” என்று கேள்விமேற் கேள்விகேட்டுக் கொண்டிருந்தமையால், அக்கேள்விகளுக்கு விடை சொல்லி முடிப்பதற்கே எட்டுமணியாயிற்று!” என்றனர். பின்னர் ஒருவர், “என் மனைவி, இன்றைக்குத் திங்கட்கிழமை, ஏழரை மணிமுதல் ஒன்பது மணிவரையில் இராகுகாலம், அது கழித்துத்தான் போகவேண்டும்" என்று வற்புறுத்தி மிகமெதுவாகத் தன் வீட்டு வேலையைச் செய்து கொண்டிருந்தமையால், யான், ஒன்பது மணிக்குமேற் பட்டினியாகவே இங்குவந்தும் பயன்பட வில்லை'என்றனர். வேறொருவர், “என் மனைவி ‘நான் பட்டுப் புடவையுந் தங்கச்சங்கிலியும் வாங்க வைத்திருக்கும் பணத்தைப் பழம் வாங்கக் கொடுக்கமாட்டேன்; கடனுக்கு வாங்கிவிற்றுக் கடனைச் செலுத்தும்' என்று சொல்லிவிட்டனள்; அதனால் நேரங்கழித்துக் கையிற் காசின்றி வரலாயிற்று!” என்றனர். இங்ஙனமே பிந்தவந்தவர் ஒவ்வொருவருந் தம் மனைவிமார்மேற் குறைசொல்லினர். முந்திவந்தவர் சிலர்தம் மனைவிமாரின் அறிவையும் முயற்சியையுஞ் சுருசுருப்பையும் பாராட்டிப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_10.pdf/302&oldid=1579928" இலிருந்து மீள்விக்கப்பட்டது