உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 10.pdf/303

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

278

மறைமலையம் 10

பேசினர். முதன்முதல் வந்தவரும், அவரை யடுத்துவந்த ஒரு சிலரும் அப்போது வந்திறங்கிய குடகுநாரத்தம்பழங்கள் அவ் வளவையும் நயத்தவிலையில் வாங்கிக்கொண்டமையாற்,

பின்வந்தவணிகர்கள்

அவர்களிடத்திலேயே மிக்கவிலை கொடுத்து அவைகளை வாங்கிக் கடையில் வைத்து விற்பனை செய்ய வேண்டியவரானார்கள்; அவை விற்பனையாக ஒரு கிழமை வரையிற் சென்றமையால், அப்பழங்களிற் சிலபல அழுகியும்போயின; குடகுக்கிச்சிலிகள் விரைவில் அழுகுந் தன்மைய. முதலிற்சென்று வாங்கிய வணிகரோ உடனே மற்றைக் கடைக்காரர்க்கு அவைகளை விற்பனை செய்து விட்டமையால், அவர்க்கு ஏதும் விரையம் நேராமையொடு, மிகுந்த ஊதியமும் பெற்றனர். அதுகொண்டு, தங்கணவரின் அறிவும், முயற்சியும் நன்கறிந்த பெண்டிர், அவர் விரைந்து செய்யும் முயற்சிக ளுக்குக் காரணங் கேட்டுக் கொண்டு இராமல், உடனே அவர் ஏவியவைகளை விரைந்து செய்தல் பெரிதும் நலந்தருவதாதல் விளங்குகின்றதன்றோ? ஆதலாற், றங்கணவர் விரைந்து ஒன்று செய்கவென ஏவிய போதும், அவர் தாம் வழிநாட்களில் மேற்கொள்ள வேண்டிய முயற்சிகளைப்பற்றி ஆழநினைந்து ஆராய்ந்து கொண்டிருக்கும் போதும், மனைவிமார் அவரைக் கேள்விமேற் கேள்வி கேட்டு கேட்டு அவர்தம் முயற்சியையும் நினைவையும் பழுதுபடுத்தல் ஆகாது.

அங்ஙனமாயின், மனைவிமார்க்குத் தங் கணவன்மார் செய்யும் முயற்சிகளையும் அவர் எண்ணும் எண்ணங்களையும் அறிந்துகொள்ளுதலில் அவா எழுதல் இயல்பன்றோ? அதனால், அவர் அவற்றை யறிய வினாவுதலும் இயல்பே யன்றோ? எனின்; கணவன்மார் தாஞ்செய்யும் முயற்சிகளையும், அவற்றை குறித்துத் தாம் எண்ணும் எண்ணங்களையுந் தம் மனைவி மார்க்கு உரையாதிரார். கணவற்கு மனைவியினும் உற்றார் பிறர் இல்லாமையின், தம்முள்ளத் துள்ளவைகளை அவன் ஒழிவு நேரங்களில் அவட்கு வெளிவிட்டுச் சொன்னால் அல்லாமல், அவனதுள்ளம் அமைதி பெறுவதில்லை. ஆதலால், அவன் பரபரப்பாயிருக்கும் நேரங்களில் அவனை ஏதுங் கேளாமல், அவன் ஏவியவைகளை அறிவாய் விரைந்து செய்து முடித்துச் சிறிது பொறுமையாக இருப்பாளாயின், அவனே அவற்றின் காரணங்களை அன்றைப்பொழுதிலோ அல்லது பின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_10.pdf/303&oldid=1579929" இலிருந்து மீள்விக்கப்பட்டது