உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 10.pdf/304

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் ஆராய்ச்சி

279

னாளிலோ அவட்குக் கட்டாயந் தெரிவித்துவிடுவன். இந்நுட்பம் உணர்ந்த பெண்டிர், தங்கணவர் தமக்குத் தெரிவிக்க வேண்டுவனவற்றைத் தெரிவிக்குமுன்னரே ஏதுங்கேளார். இந்நுட்பம் உணராத மகளிரோ அவரை ஒவ்வொன்றுங் கேட்டு வருத்துவர். திருவள்ளுவரின் மனைவியாரான பாப்பம்மை யாரோ நுண்ணுணர்வு வாய்ந்தவராகையால், தங் கணவரின் மனப்பான்மையும் அவரது பேரறிவும் நன்கறிந்து அவர் தமக்குத் தெரிவிக்க வேண்டியவைகளைத் தெரிவிக்க வேண்டுங் காலங்களில் திண்ணமாய்த் தெரிவிப்பர் என நம்பி, அவர் ஏவியவைகளைக் காரணங் கேளாமல் உடனே செய்துவந்தன ரன்றித், தமக்குப் பகுத்தறிவும் ஆராய்ச்சியுணர்வும் இல்லாமை யால் அங்ஙனஞ் செய்தாரெனக்கோடல் பொருந்தாது.நாயனார் வியவைகளுக்கு முதலிற் காரணங் கேளாது அவர் ஒழுகி வந்தனராயினும் பின்னர் அவற்றின் காரணங்களைத் தெரிந்து கொள்வதில் அவர் வேட்கை மிகுதியுமுடையரா யிருந்தன ரென்பதும், அக்குறிப்பறிந்து நாயனாரும் அவர்க்கு அவற்றை உரிய காலத்திற் றெரிவித்துவந்தன ரென்பதும், அம்மையார் இறக்குந்தறுவாயில், நாயனார் அதுகாறுந் தெரிவியாது விட்ட ஊசியும் ஒருசிறு கிண்ணந்தண்ணீரும் அவர்தாம் உண்ணும் பரிகலத்தின் பக்கத்தே நாடோறும் வைக்கும்படி கற்பித்ததன் காரணத்தை அறிந்துகொள்ளும் வேட்கையினால் உயிர்நீங்கா திருந்த நிகழ்ச்சிகொண்டு நன்கு அறியப்படும்.

இவ்வாறாக நாயனாரும் அவர்தம் அருமை மனைவி யாரும், ஓர் ஆவிற்கு இருகோடு தோன்றினாற் போலவும் ஒரு காக்கையின் இருகண்ணிற்கும் ஒருமணியே கலந்தியங்குதல் போலவுந் இருதலைப் புள்ளினுக்கு ஓர் உயிரே உள் நின்று உலவுதல் போலவும், ஒருங்கியைந்து இல் வாழ்க்கை நடாத்தும் மாட்சி வரவர எங்கும் பரவி விளங்கலாயிற்று. அதுகண்ட ஒரு தமிழ் மாணவன், நாயனார் தாம் அருளிச்செய்த திருக்குறளிற் சொல்லியபடியேயாவுஞ் செய்து வருதலைத், தான் பின்னும் ஆராய்ந்து தெளிதல்வேண்டி, நாயனார் தாம் நெய்த ஆடை யினை விற்கும் இடஞ் சென்று, அவர் கையிற் பிடித்திருந்த அவ்வாடையினைத் தன் கையில் வாங்கி ‘இதன் விலை யாது? என்று வினவ, அவர் 'அதன் விலை இரண்டு பணம்' என்றனர். அதன்பின் அவன் அதனை இரண்டாகக் கிழித்து, 'இத்துண்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_10.pdf/304&oldid=1579930" இலிருந்து மீள்விக்கப்பட்டது