உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 10.pdf/305

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

280

மறைமலையம் - 10

ஒவ்வொன்றின் விலை என்ன? என்று வினவ,

அவர், ஒவ்வொன்றின் விலை ஒவ்வொரு பணம்' என்றனர். பின்னும், அவன் அவ்வொவ் வொரு துண்டினையும் இவ்விரண்டாகக் கிழித்து, ‘இச் கிழிவு ஒவ்வொன்றின் விலை யாது? ' என வினவ, அவர், ‘அக்கிழிவு ஒவ்வொன்றின் விலை அவ்வரைப்பணம்' என அமைதியாக விடை நுவன்றனர். அதன் மேலும் அவன் அவ்வொவ்வொரு கிழிவினையும் இவ் விரண்டாகக் கிழித்து, 'இச் சிறுகிழிவு ஒவ்வொன்றின் விலையாது?' எனக்கேட்ப, அவர், காற்காற்பணம்' என்ப பின்னும் பொறுமையாகவே விலை கூறினர். முகத்திற் சிறிதுஞ் சினக்குறி காணப்படாத அவரது உள்ளப் பொறுமையினைக் கண்ட அம்மாணவன் பெரிதும் வியப்படைந்து, அம்முழு ஆடைக்குரிய விலை யினையும் அவர் கையில் வைத்து அவரை வணங்கிப் போயினன் என்ப.

அங்ஙனஞ் சென்ற அம்மாணவன் அவ்வளவில் அமைதி பெறானாய்ப் பின்னும் அவரது பொறுமையினை ஆராய்ந்து காணும் விருப்பினனாய், மற்றொரு நாள் நாயனாரது இல்லத்திற்குச் சென்று, “பசித்து வந்தேன், எனக்குச் சோறிடுக எனவேண்ட, நாயனாரும் அவற்கு இரங்கித், தம் மனைவியாரை விளித்து, 'இப்பிள்ளைக்கு உணவு கொடு' எனக் கட்டளை யிட்டார். அம்மையாரும் பரிந்து அவ் விளைஞற்கு உணவு படைத்தார். அதனையுண்டு சிறிது நேரம் அமர்ந்தபின், அவன் அம்மையாரது வலதுகையைப் பிடித் திழுக்க, அம்மையார் திடுக்கிட்டுக் கூவினார். நாயனார் உடனே உள்ளே சென்று நோக்க,அவ்விளைஞன் தம் மனைவியாரின் கையைப் பிடித்திழுக்கக் கண்டார். கண்டு சினங்கொண்டு அவனைப்பிடித்து அருகுநின்ற ஒரு தூணிற் பிணைத்து ஒரு பிரப்பங்கோலால் தொடைமேல் நன்றாய் விளாசினார். அதுபற்றி அவன் நாயனாரை நோக்கி,

"மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாந்தந் தகுதியான் வென்று விடல்'

99

(குறள் 158)

என்று நீர் நுமது திருக்குறளில் எழுதி வைத்தது பிறர்க்கு மட்டுமோ? நுமக்கும் உண்டோ?” எனக் கடிந்து வினவி னான்.அதுகேட்ட நாயனார், 'அஃதெல்லார்க்குமே; ஆயினும், யாம் அதற்குமேல் எழுதிய,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_10.pdf/305&oldid=1579931" இலிருந்து மீள்விக்கப்பட்டது