உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 10.pdf/306

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் ஆராய்ச்சி

“செய்தக்க அல்ல செயக்கெடும்; செய்தக்க செய்யாமை யானுங் கெடும்”

281

(குறள் 466)

என்னுஞ் செய்யுளை நீ உணர்ந்திலைபோலும்! பொறுமைக் கும் ஒரு வரம்புண்டு; செயத்தக அல்லாத பெருங்குற்றத்தை ஒருவன் செய்வனாயின், அவன்பாற் பொறுமைகாட்டுதல் எவர்க்குமே ஆகாது’ என நுவன்று அவனுக்கு அறிவு தெருட்டினார்; அவ்விளைஞனும் அவ்வுறுதிமொழிகேட்டு அறிவு தெருண்டு நாயனாரை வணங்கிப் போயினன் என்ப. இங்ஙனமே, நாயனார் நடாத்திய இல்வாழ்க்கையின் நுட்ப நிகழ்ச்சிகள் இன்னும் பலஉள.

இனி, நாயனார் தாம் அருளிச்செய்த 'திருக்குறளில் இல்வாழ்க்கையின் நன்மக்கட்பேற்றினை

பயனாவது

எய்துவதேயென்று தேற்றி,

“மங்கல மென்ப மனைமாட்சி மற்றதன்

நன்கல நன்மக்கட்பேறு”

(குறள் 60)

எனக் கூறுதலாலும், தம் பிள்ளைகளின் மழலைச் சொல்லி னிமையினைக் கேட்டு இன்புற்றறியாதவர்களே குழலொலி யாழொலியினை இனிதெனக் கூறுவரெனக் கிளந்து,

என

“குழலினி தியாழினி தென்பதம் மக்கள் மழலைச் சொற் கேளாதவர்”

(குறள் 66)

மொழிதலாலும், தம் மக்களின் சிறிய கையினால் அளாவப்பட்டது புல்லிய கூழாயிருப்பினும் அஃது அமிழ்

தினும் இனிதாகுமென்பது விளங்க,

“அமிழ்தினும் ஆற்ற இனிதே தம்மக்கள் சிறுகை அளாவிய கூழ்”

(குறள் 64)

தாடுதலேயா

என நுவலுதலாலும், தாய் தந்தையர்க் கின்பமாவது தம்

பிள்ளைகளின் மெல்லிய

மென்பது தோன்ற,

வுடம்பைத்

“மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம், மற்றவர் சொற்கேட்ட லின்பஞ் செவிக்கு”

(குறள் 65)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_10.pdf/306&oldid=1579932" இலிருந்து மீள்விக்கப்பட்டது