உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 10.pdf/309

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

284

அடிகளாரின் திருக்குறள் ஆராய்ச்சித்திறன்

தமிழக மறுமலர்ச்சி இயக்கத்தின் தனிப்பெருந் தலைவராக மறைமலையடிகள் விளங்குகிறார். அவருடைய ஆழ்ந்த தமிழ்ப் புலமையும் அகன்ற ஆங்கில அறிவும் பரந்த சமற்கிருத மொழிப் புலமையும் தமிழின் மறுமலர்ச்சிக்கும் தமிழகத்தின் மறுமலர்ச்சிக்கும் அடிப்படையாய் அமைந்தன. 'தமிழன்' எனும் அவருடைய எண்ணத்தின் எழுச்சியும், 'சைவன்' எனும் உணர்வினால் அவர் உள்ளத்தில் உண்டான மலர்ச்சியும் தமிழ் ஆராய்ச்சியுலகில் புதியதொரு திருப்பத்தை உண்டாக்கின. இதனால், பண்டைத் தமிழரின் பழம் பெருமையையும் தமிழ்ப் பண்பாட்டின் தொன்மைச் சிறப்பையும் உலகிற்கு உணர்த்தும் வகையில் அடிகளாரின் ஆராய்ச்சிப்பணி அமைந்ததைக் காணுகின்றோம்.

அவருடைய ய உள்ளத்தைப் பெரிதும் கவர்ந்த தமிழ் இலக்கியங்கள் திருவாசகம், திருக்குறள், தொல்காப்பியம், திருக்கோவையார் என்பன. இவற்றுள் திருவாசகமும் திருக்குறளும் முதன்மையிடம் பெற்றுள்ளன. திருக்குறளின் கருத்துகளை வாய்ப்புக் கிடைக்கும் இடங்களில் எல்லாம் அவர் எடுத்துரைத்துள்ளார். அவருடைய புதினங்களில் திருக்குறள் கருத்துகள் கதிர்மணிகளாக ஒளி விடுகின்றன.

டம்

முப்பதுக்கு மேற்பட்ட ஆராய்ச்சி நூல்களை அடிகள் வரைந்துள்ளார். அவற்றுள் எல்லாம் திருக்குறள் பற்றிய ஆராய்ச்சிப் பகுதிகள், விளக்கங்கள், புத்துரைகள் இ பெற்றுள்ளன. ‘திருக்குறள்' எனும் பெயரினைக் கொண்டு அவர் ரண்டு நூல்கள் இயற்றியுள்ளார். முதற்குறள் வாதநிரா கரணம் என்பது முதல் நூலாகும்.'அகரமுதல எழுத்தெல்லாம்’ எனத் தொடங்கும் முதற்குறட்பாவிற்கு அத்துவிதத்தின் அடிப்படையில் கொடுக்கப்பட்ட விளக்கத்தை மறுக்கும் நூல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_10.pdf/309&oldid=1579935" இலிருந்து மீள்விக்கப்பட்டது