உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 10.pdf/310

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னிணைப்பு

285

இது. 'எழுத்துக்கள் எல்லாம் அகரத்தையே முதலாக உடையன; அதைப்போல, உலகம் இறைவனை முதலாக உடைத்து' எனும் கருத்தினை விளக்குகின்ற நிலையில் முதலாக எனும் தொடர் மயக்கம் தருவதாக அமைந்துள்ளதை அடிகள் நன்கு தெளிவுறுத்தி யுள்ளார். 'இறைவன், உலகம், உயிர்' எனும் முப்பொருள்களுள் இறைவன் முதன்மைனயானவன் என்பதை அவர்கள் தக்க காரணங்கள் காட்டி நிறுவியுள்ளார். அடிகளின் மற்றொரு நூல் திருக்குறளாராய்ச்சி என்பதாகும். திருக்குறளைப் பற்றி அறிய விரும்புவோருக்கு இந்நூல் சிறந்ததோர் அறிமுக நூலாகப் பயன்படுவதாகும்.

தமிழக வரலாற்றின் கலங்கரை விளக்கம்

பருங்குறையாகவே

மறைமலையடிகளாரின் திருக்குறள் ஆராய்ச்சிப் பணியில் தன்னிகரற்று விளங்குவது திருவள்ளுவரின் காலத்தைக் கணித்து, தமிழருக்கென்று ஒரு சகாப்தத்தை (Era) வரையறுத்துத் தந்துள்ளமையாகும். இந்திய வரலாற்றில் எத்தனையோ சகாப்தங்கள் இடம்பெற்றுள்ளன. ஆனால், தமிழருக்கென்று இதுவரையில் சகாப்தம் கண்டவர் யாருமிலர். எனவே, அஃது ஒரு இருந்து வந்தது. அக் குறையைப் போக்குகின்ற வகையில், யுவ ஆண்டுத் தைத் திங்கள் ஐந்தாம் நாள் (18-1-1935), திருவள்ளுவர் திருநாள் கழகத்தினர் நடத்திய திருவிழாவில் தலைமை பூண்டருளிய அடிகள், “கிறித்து பிறப்பதற்கு 30 ஆண்டுகட்கு முன் திருவள்ளுவர் பிறந்தார் என்பது நான் ஆராய்ந்து கண்ட முடிவாகும்! என்று அறிவித்துத் திருவள்ளுவர் நூற்றாண்டைத் தொடங்கி வைத்தார். வருங்காலத்தில் தமிழ் வரலாற்றையும் தமிழக வரலாற்றையும் ஆராய்வோருக்கு இத் திருவள்ளுவர் நூற்றாண்டு ஒரு கலங்கரை விளக்கமாக விளங்கும் என்பது உறுதி.

திருக்குறள் ஆராய்ச்சி

திருக்குறளை உலகிற்கு வழங்கிய தெய்வப் புலவர் திருவள்ளுவரின் பெயர்க் காரணம், திருக்குறளின் சிறப்பு, திருவள்ளுவரின் வரலாறு போன்ற பல செய்திகளை ஆய்ந்து உண்மையை நிலைநாட்டுவதில் ஆசிரியர் பேரீடுபாடு கொண்டிருந்தார். இதனால், பல சமயங்களில், 'திருவள்ளுவர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_10.pdf/310&oldid=1579936" இலிருந்து மீள்விக்கப்பட்டது