உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 10.pdf/311

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

286

மறைமலையம் -10

திருக்குறள்’, 'திருவள்ளுவர்' எனும் பொதுக்கட்டுரைகளை அடிகள் எழுதியுள்ளார்.?

2

வை அல்லாமல், 'ஞானசாகரம்' எனும் திங்கள் இதழில், திருக்குறள் பற்றிய ப ஆராய்ச்சிக் கட்டுரைகள் சில வெளிவந்துள்ளன. அவை, இப்பொழுது திருக்குறளாராய்ச்சி எனும் நூலாக வெளியிடப்பட்டுள்ளது. இவை வை யாவும் அடிகளின் ஆழ்ந்த திருக்குறள் புலமையையும், ஆராய்ச்சி நோக்கையும் நமக்கு அறிவிக்கின்றன.

3

வள்ளுவர்' எனும் பெயர்க் காரணத்தை ஆராய்ந்த மறைமலையடிகள், 'வள்ளுவர் என்று ஒரு மகன் பெயரிடப்படுதல் யாண்டும் வழக்கில் இருந்ததாகத் தெரியவில்லை! ஆயினும், தொன்மையாக அப் பெயர் இருந்துவருவது குறித்து அஃதே பெயராகக் கொள்ளல் அறிவுடைமையாகும் எனத்

துணிந்துள்ளமை இங்குக் குறிப்பிடத் தக்கதாகும்.

994

திருக்குறள் ‘அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால்' எனும் முப்பெரும் பிரிவுகளை உடையதாக அமைக்கப் பட்டிருப்பதைப் பற்றிப் பலர் ஆராய்ந்துள்ளனர். பொருளை ‘அகம், புறம்' எனப் பகுப்பது பண்டைத் தமிழர் மேற்கொண்ட முறை. ஆனால், திருவள்ளுவரோ இவ்வாறு பாகுபடுத்தவில்லை. இதனை, “இவர் பொருட் பாகுபாட்டினை அறம் பொருளின்ப மென வடநூல் வழக்குப் பற்றியோ துதலான்” என்று பரிமேலழகர் குறிப்பிடுவர்.5 ஆனால் அடிகளோ, என்று கூறுவது பொருந்தாது என மறுக்க. வடமொழியில் மனுமுதலான மிருதி நூல்கள் எல்லாம் பிரமசரியம், கிருகத்தம், வானப்பிரத்தம், சன்னியாசம் என்னும் நால்வகை நிலைபற்றி யோதியதல்லது அறம் பொருளின்ப வழக்குப் பற்றியோதாமையும் யாங் கூறியதே பொருள் என்பதை வலியுறுத்தும்”“ என்று விளக்கியுள்ளார்.

66

மற்றும் 'இன்பமும் பொருளும் அறனும்' எனும் தொல்காப்பியர் வைப்பு முறைக்கு மாறாகத் திருவள்ளுவர் ‘அறம் பொருள் இன்பம்' என்று தம் நூலினை அமைத்ததற்குரிய காரணங்களை அடிகள் மிக விரிவாக ஆராய்ந்துள்ளார். ஆசிரியர் திருவள்ளுவனார் அறம் பொருள் இன்பமென வைத்து நூல் செய்த முறை தமிழமுறை யன்றாம்”7 என்று அடிகள் அறிவிக்கின்றார். அதற்குரிய காரணத்தை, “திருவள்ளுவனார்,

66

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_10.pdf/311&oldid=1579937" இலிருந்து மீள்விக்கப்பட்டது