உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 10.pdf/312

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* பின்னிணைப்பு

287

தங்காலத்துத் தம்மோடுடனிருக்கும் மக்கள், பௌத்த சமண் மயக்குரையிற் சிக்கி அறத்திற்கே உயர்வு சொல்லுதல் கண்டு அவர் வழியே சென்று அவரைத் திருத்துவாராய், அறத்தை முன் வைத்து நூல் செய்வாராயினர்”8 என்று விளக்கி யுள்ளமை இங்குக் கருதத் தக்கது.

தென்புலத்தார்

இல்வாழ்க்கை எனும் அதிகாரத்தில் வரும், "தென்புலத்தார் தெய்வம் விருந்துஒக்கல் தானென்றாங்கு ஐம்புலத்துஆறு ஓம்பல் தலை”

எனும் குறட்பாவிற்குப் பலர் பலவகையான விளக்கங்கள் கொடுத்துள்ளனர். சிறப்பாக, 'தென்புலத்தார் யார்?' என்பதில் பண்டை உரையாசிரியர்கள் இடையேயும் கருத்து வேற்றுமை உண்டு. மறைமலையடிகளார் இதைப்பற்றி நீடு நினைந்துள்ளார். பழைய ஆசிரியர்களின் கருத்துகளின் பொருத்தமின்மையைப் புலப்படுத்தி,

66

"தென்புலத்தில் மிக்க நாகரிக முடையவராயிருந்து காலஞ்சென்ற தம் மூதாதையர் அனைவரையும் ஒருங்கு சேர்த்து நினைந்து, அவர்க்கு மேன்மேல் நலம் அருள்கவென்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டி நன்றிக் கடன் செலுத்துவதே அம் மூதாதையர் வழிவந்த நமக்கு உரியதாம்”9

எனத் தம் கருத்தினை நிறுவியுள்ளார்.

வாய்மையின் பயன்

வள்ளுவர் வாய்மைக்கு

புதுமையானது; போற்றத்தக்கது.

அளித்துள்ள

விளக்கம்

“வாய்மை யெனப்படுவது யாதெனின் யாதொன்றும் தீமை யிலாத சொலல்'

(குறள் 291)

எனும் குறட்பாவிற்கு அடிகள் நல்லதொரு விளக்கம் கொடுத்துள்ளார். இக் குறட்பாவில் பெரும்பான்மையோருக்குப் பெரும்பயன் அளிப்பதாக வாய்மை' விளக்கப்பட்டுள்ளது என்று அடிகள் குறிப்பிட்டுள்ளார். மற்றும் “என்று ஆசிரியர் வரையறுத்துக் கூறியது ஐான்ஸ்டூவர்ட் மில் (J.S. Mill) என்பாரின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_10.pdf/312&oldid=1579938" இலிருந்து மீள்விக்கப்பட்டது