உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 10.pdf/313

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

288

மறைமலையம் -10

பெரும் பயன்' என்ற'யுட்டிலிட்டேரியனிஸம்' (Utilitarianism) என்ற கொள்கைக்கு அரண் கோலுவது கண்டு வியவாதார் யார்?”10 என்று வினவுகிறார்.

அகர முதல எழுத்து

திருக்குறளின் முதற் பாவிற்கு

மறைமலையடிகள், 'சிவஞானபோத ஆராய்ச்சி' எனும் நூலில் தந்துள்ள விளக்கம் சிறப்புமிக்கது.

“விந்து நாதங்கள் இவ் விரண்டனுள்ளும் விந்து முதலாய் நிற்றல் தெளித்தற் பொருட்டன்றே ஆசிரியர் தெய்வப் புலமைத் திருவள்ளுவ நாயனர், ‘அகர முதல எழுத்தெல்லாம் என்று ஓதுவாராயினதூஉ மென்க. ஈண்டு 'எழுத்தெல்லாம்' என்றது வரிவடிவு ஒலிவடிவில் நின்ற எல்லா எழுத்துக்களையும் அகப்படுத்துதற் பொருட்டு; 'அகரம்' என்றது புலப்பட்டும் புலப்படாததும் நின்ற அகரவொலியினையும் அகரவடிவினையும் உணர்த்து தற் பொருட்டுப் பொதுப்பட நின்றமையும் உய்த்துணரற் பாலதாம் என்க

9971

எனும் விளக்கம் அடிகளின் மதிநுட்பத்தையும் ஆராய்ச்சித் திறனையும் வெளிப்படுத்துகிறது.

திருக்குறளே தலைசிறந்த பிரமாண நூல்

இறைவனின் இயல்புகளை விளக்குகின்ற இடத்து,

“பிரமம் உள்பொருளாய்க் குணமுடைத்தாதல் பற்றியன்றே தெய்வப் புலமைத் திருவள்ளுவ நாயனார். ‘எண்குணத்தான் தாளை வணங்காத் தலை' என்று அருளிச் செய்வாராயினர். திருக்குறளின் மேற்பட்ட பிரமாண நூல் உலகத்தின்மையின், இவ் வருமைத் திருவாக்கிய வுரையோடு முரணி எவர், யாது கூறினும் அஃதெல்லாம் பிரமாணமாதல் இல்லையென் றொழிக!”12

எனத் திருக்குறளை ஒப்புயர்வற்ற பிரமாண நூலாக மறைமலையடிகள் போற்றியுள்ளார்.

அடிகளின் திருக்குறள் ஆராய்ச்சித் திறனுக்கு இவை போதிய சான்றுகளாகும். மக்களிடையே திருக்குறளைப் பற்றிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_10.pdf/313&oldid=1579939" இலிருந்து மீள்விக்கப்பட்டது