உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 10.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முற்காலப் பிற்காலத் தமிழ்ப்புலவோர்

7

L

1. மக்களின் முக்காலவுணர்வு

முற்காலத்திருந்த தமிழ்ப்புலவர் நிலையினையும் பிற்காலத் துள்ள தமிழ்ப்புலவர் நிலையினையும் ஒப்பிட்டுப் பார்த்தாலன்றி, இனிவருந் தமிழ்ப்புலவர் தமது நிலையினை மேன்மேல் உயரச் செய்தலும், இத் தமிழ்நாட்டின்கண் உள்ள கல்வியறிவில்லாத் தமிழ்மக்களைக் கல்வியறிவில் உயர்த்து தலும் ஏலா. ஆதலால், முன்பின் என்னுங் கால வேறுபட்டால் நிலையும் வேறுபட்டுள்ள இருவேறு தமிழ்ப் புலவரின் தன்மைகளை ஆராய்ந்துபார்த்தல் புலவர்க்கேயன்றித் தமிழ்மொழிப் பயிற்சியினை வேண்டுவார் அனைவர்க்கும் இன்றியமையாததாய் இருக்கின்றது.

மேலும், இப்போதுள்ள நிலையளவில் அமைதி பெற்றிருப்பது பெரும்பாலும் விலங்கினங்களில் மட்டுமே காணப்படுகின்றது. பசியெடுத்தவுடனே இரை இரை தேடித் தின்பதும், பசி தீர்ந்தவுடன் உறங்குவதுங், காமவிருப்பு மிகுந்தக்கால் ஆணும் பெண்ணுமாய் மருவி யின்புறுவதும், அங்ஙனம் மருவுதலாற் பிறக்கும் இளங்குழவிகளை அவை தம்மைப் பாதுகாத்துக் கொள்ளும் பருவம் எய்துந்துணையும் வளர்த்து அதன்பின் அவற்றொடு தொடர்பின்றி யொழுகு வதும், விலங்கினங்களில் மட்டுமே காணப்படுகின்றன வ்வளவுக்குமேல், அவை தம்முடைய முற்கால நிலைமை யினை இப்போதுள்ள நிலைமையுடன் இணைத்துப் பார்த்து, இனிவருந் தமது எதிர்கால நிலைமையினை ஒழுங்குசெய்து கொள்ள வல்லன அல்ல. ஆனால் மக்களினும் தாழ்ந்த சிற்றுயிர்களில் எறும்பு தேனீ முதலான சில சிற்றுயிர்களோ தமது பிற்கால நிலைமையினையும் உணர்ந்து அதற்கேற்றபடி தமது நிகழ்கால முயற்சியினை இசைத்து நடக்குந் தன்மைய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_10.pdf/32&oldid=1579654" இலிருந்து மீள்விக்கப்பட்டது