உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 10.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8

மறைமலையம் 10

வேனும், அவை அங்ஙனஞ் செய்வதூஉந் தமக்குள்ள இயற்கை யுணர்ச்சியினால் அல்லாமற் பகுத்துணர்ச்சியினால் அன்று.

ஆனால், மக்களோ உண்ணல் உடுத்தல் உறங்கல் இன்புறல் என்னும் நிகழ்கால நுகர்ச்சியளவில் அமைதி பெறாது தாமுந் தம்மைச்சார்ந்தாரும் நண்பரும் பகைவருமென்னும் இவரெல்லாம் முன்னிருந்த நிலமையினை எண்ணிப்பார்த்து, அதற்கும் ப்போது நடைபெறாநின்ற தமது நிகழ்கால வாழ்க்கைக்கும் உள்ள தொடர்பினையுந் தொடுத்தாராய்ந்து, இனி வரக்கடவ தாகிய தமது எதிர்கால வாழ்க்கைக்கு வேண்டுங் கருவிகளையும் ப்போதே தேடிப்பெற்று, அவ்வெதிர்கால வாழ்க்கையைக் குறியாக வைத்தே தமது நிகழ்காலமுயற்சியினை நடைபெறச் செய்கின்றனர். இருந்தவாற்றால், மாபெருங்கடல் ஒன்றிலே யுள்ள மலைகளையும் மணல்மேடுகளையும் மிகுவிரைவாய்ப் பேராற்றலுடன் செல்லும் நீரோட்டங்களையும் மென்காற்றும் புயற்காற்றும் வீசும் பருவங்களையும் கோள்கள் நாள்களின் இயக்கங்களையுந் தான் செல்லும் நாடு நகரங்களின் இருப்புக் களையும் முன்னதாக நன்கறிந்த மீகாமன் ஒருவனே அதன்கண் இப்போது தான் கொண்டு செலுத்தும் மரக்கலத்தினைச் செவ்வனே செலுத்த வல்லனாவனல்லது, அவைதம்மை முன்னறியாப் பேதையொருவன் அதனை அதன்கண் நடத்த மாட்டுவனோ? அதுபோல, இவ்வுலகவாழ்க்கை யென்னும் மாபெருங்கடலிலே தமது உயிர்வாழ்க்கை யென்னும் மரக்கலத்தினை நடத்தலுறும் மக்கள் ஒவ்வொருவரும், தமது வாழ்க்கைக்கு இசைவான காலம் இடங் கருவிகளையும் அதற்கு மாறான காலம் இடங் கருவிகளையும், தம்மோடு ஒத்த தொடர்புடை யாரையுந் தமக்கு மாறாய்நிற்கும் பகைஞரையும், தமக்கு ஒத்தாரைத் துணைக்கொண்டு அல்லாரை விலக்கி யொழுகும் வகைகளையும் முன்னறிந்து, தமது வாழ்க்கை எதன் பொருட்டு நடைபெறுகின்றது? அஃது எதன்கட் சென்று எவ்வாறு நிலைபெறும்? என்னும் வருங்கால உணர்வினையும் உடையராயினல்லது, அவர் தமது வாழ்க்கையினை அறிவும் பயனும் இன்பமும் மேன்மேற் பெருக நடத்த மாட்டுவாரல்லர். செல்கால வருங்கால நிகழ்ச்சிகளைத் தமது நிகழ்கால வாழ்க்கை யுடன் பிணைத்துப் பார்க்கவும், பார்த்து அதனை அவற்றிற்கேற்ப நடைபெறு விக்கவும் வல்ல தகுதி மக்களுக்கேயல்லாமல்,

L

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_10.pdf/33&oldid=1579655" இலிருந்து மீள்விக்கப்பட்டது