உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 10.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முற்காலப் பிற்காலத் தமிழ்ப்புலவோர்

9

மக்களல்லாத விலங்கினங் கட்கும் அவற்றினுங் தாழ்ந்த பிற சிற்றுயிர்கட்கும் பெரும்பாலும் இல்லையன்றோ? அத்தகைய தகுதியிருந்தும், அதனைப் பயன் படுத்தும் அறிவும் முயற்சியும் இல்லாதவர் மக்களெனப் படுவரோ? உணர்ந்து பார்மின்கள்!

செல்கால வருங்கால நிகழ்ச்சிகளைத் தமது நிகழ்கால வாழ்க்கையுடன் இயைத்து, அதனை மேன்மேற் பெருகும் அறிவாலும் மேன்மேன் முறுகும் முயற்சியானுந் திறம்பட நடாத்துவாரே, அதனை அங்ஙனம் நடாத்தாத ஏனை மக்களினுஞ் சிறந்த நாகரிவாழ்க்கை வாய்ந்தவராய்த், தாமுந்தாம் பிறந்த மக்கட்கூட்டமும் எல்லா நலங்களிலும் எல்லா ஆற்றல்களிலும் மிக்குயர்ந்து, அங்ஙனம் உயரமாட்டா ஏனைமக்களை யெல்லாந் தம் அடிக்கீழ்ப்படுத்து இனிது வாழக் காண்கின்றோம். எனவே, தாம் பிறந்த மக்கட் குழுவின் முன்னோர் இருந்த நிலையினை நன்காராய்ந்து காண்டலும்

П

கு

னித் தாம் அடையப்போகும் நிலையினை முன்னாய்ந்து தெளிதலுந், தான்நின்ற நிலையில் நின்றே முன்னும் பின்னும் நோக்கும் அரிமாவையொத்த உரவோரின் மாண் செயல்களாதலும், அங்ஙனம் முன்பின் நோக்காது பிறரைச் சார்ந்து அவர் தருவன பெற்று உண்டு உடுத்து உறங்கி உறுவதுநினையாது கழிதல் நரிமாவையொத்த இரவோரின் இழிதரு செயல்களாதலும் நன்கு பெறப்படும். பெறப்படவே, முன்பின் நோக்கி இம்மை மறுமைக்காவன செய்யாதவர், கல்வியில் மிக்கவரேயாயினுஞ் செல்வத்திற் சிறந்தவரே யாயினும் நிலைகளில் உயர்ந்தவரேயாயினும், அவரெல்லாம் உண்டு உறங்கி இன்புற்றுக்கழியும் விலங்கின்வாழ்க்கை யுடைய ராயிருத்தலால் அவரை அவ்விலங்குகளோடு ஒத்தவராக வாதல், விலங்குகட்கில்லாப் பகுத்தறிவு தமக்கிருந்தும் அதனைப் பயன் படுத்தாமையின் அவ்விலங்குகளினும் கடைப்பட்டவ ராகவாதல் வைத்துவிடுதலே செயற்பாலது.

இனி, முன்பின் நோக்கித் தமது வாழ்க்கையைச் சீர்திருத்தி நடத்தல் மக்களாய்ப் பிறந்த மன்னுயிர்க்கே வாய்த்த பெரும் பேறாயினும், அப் பேற்றினைப் பயன்படுத்தி மேன்மேல் உயர்வார் சிறு கூட்டத்தவராகவே காணப்படுகின்றனர். அச் சிறு கூட்டத்தவருள்ளுந், தம் முன்னோரின் பழங்குடி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_10.pdf/34&oldid=1579656" இலிருந்து மீள்விக்கப்பட்டது