உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 10.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10

மறைமலையம் 10

வாழ்க்கையின் வரலாறுகளை யுணர்ந்து அவை விழுமியவாய் இருத்தலின் அவற்றாற் பயன்பெறுவார் மேலுஞ் சிறு பகுதியினராயுந், தாம் அறியப்புகுந்த தம் முன்னோரின் ழ்க்கைநிலைகள் சிறந்த வல்லாமையின் அவற்றாற்

காணலாம்.

பயன்பெறாதவர் பெரும்பகுதி யினராயும் இனித் தம்முன்னோர் எவ்வகையாலுஞ் சிறந்திலாமை யினாலும் அவரது வாழ்க்கையின் இயல்புகளை யுணர்தற்கு எத்தகைய கருவியும் வாய்த்திலாமை யினாலும் அவற்றை அறியப் புகுந்து ஏமாற்றம் அடைந்தவர் இன்னும் பெரும்பகுதியினராயுங் காணப்படுகின்றனர். இங்ஙனம் நால்வேறுவகைப் பட்ட மக்கட் குழுவினரையும் இவ் விந்தியநாட்டகத்தும் இதற்குப் புறம்பேயுள்ள நாடுகளிலும் இன்றுங் அவருட் சிலரை சிலரை இங்கெடுத்துக் காட்டுவோம். தம்முன்னோரின் நிலைகளைப் பலவாற்றானுந் துருவி யாராய்ந்து, தமது இம்மை வாழ்க்கையைச் சீர்திருத்தி, மேன்மேல் உயர்ந்து வருங் குழுவினர் ஆங்கில நன்மக்களாகவே காணப்படுகின்றனர். இனித், தம் முன்னோரின் வரலாறுகளை ஆராயப்புகுந்து அவை சிறந்தனவாயிருத்தலின் அவற்றோ டொப்ப வாழ்க்கை செலுத்திப் பயன்பெறுஞ் சிறு குழுவினர் நம் தமிழ் மக்களுள்ளேயே ஆங்காங்குச் சிதர்ந்து காணப்படு கின்றனர். இனி, இஞ்ஞான்றை இந்திய மக்களிற் சிறு சிறு கூட்டத்தினராய் ஆங்காங்கு உயிர்வாழ்குவார் பலருந் தம்மை ஆரியரெனக் கருதித், தம்முன்னோரின் வாழ்க்கை இயல்புகளைப் பெரிது ஆராய்ந்தும், அம் முன்னோர் ஆற்றிய வேள்விகள் பல்லுயிர்க்கொலையுஞ் சோமப்பூண்டை நறுக்கிப் பிழிந்து ஆக்கிய கட்குடியும் பலவேறு சிறு தெய்வவணக்கமும் வாய்ந்தனவா யிருத்தலாலும், அவர் கட்டிய மிருதி நூற்கோட்பாடுகளைத் தழீஇ நடந்தால் இஞ்ஞான்றை உயிர் வாழ்க்கை தமக்கு இனிது நடவாதெனக் கண்டமையாலும் அவை தம்மைப் பெரும்பாலுந் தழுவி நடவாதவராகவே காணப்படுகின்றனர். இனித், தெலுங்கர் மலையாளர் கன்னடர் முதலான பண்டைத் தமிழ் மக்கட் பகுப்பினர், தம்முன்னோர் அறுநூறு எழுநூறு ஆண்டுகட்குமுன் எத்தகைய வாழ்க்கை செலுத்தினர், அவர் எவ்வெந்நூல்கள் எழுதிவைத்தனர் என்று ஆராய்ந்து பார்த்தும், அவ் வாராய்ச்சியாற் றம் முன்னோரைப் பற்றிய குறிப்பு ஏதுமே புலனாகாமையின் அவரெல்லாம் அதில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_10.pdf/35&oldid=1579657" இலிருந்து மீள்விக்கப்பட்டது