உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 10.pdf/323

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

298

மறைமலையம் 10

செயலுக்கு வரும் அறம் கரைவது திருக்குறள்; மக்கள் வாழ வழிவகுப்பது திருக்குறள்; பல நிலை அறம் தழுவியது திருக்குறள்; எந்நிலைய மாந்தரையும் முன்னேற்றுவது திருக்குறள்; உலகு ஒட்டும் நெறிகாட்டுவது திருக்குறள்; ஒருவன் வாழ்க்கை அவனைப் பொறுத்தது என்ற உண்மை அறைவது திருக்குறள்;

வள்ளுவர் தனிப்பொது நெஞ்சம் யாது?

செயல், செயல், செயல். சொல்வது செயலுக்கு வரவேண்டும். செயலுக்கு வருமாறு சொல்ல வேண்டும் என்னும் ஓர் அடிப்படைக் கருத்தினைத் தம் நெஞ்சில் நீள இருத்திக் கொண்டே குறள் எழுதியவர் வள்ளுவர். செயல் அடிப்படையை யாண்டும் மறவா உள்ளத்தினர் அப்பெருமகன். ஆதலால் செயலே வள்ளுவம் எனச் செய்க.

யது.

திருக்குறள் கருத்து வகையால் உலக மக்கட்கு எல்லாம் உரியது. எனினும், மொழிகாரணமாய்! நமக்கு உறவுடை ஆதலின் அதனை உள்ளவாறு நாம் உணர்தலும், உணர்ந்தவாறு மொழிபெயர்த்து உலகிடைப் பரப்பலும் நம் கடன். ஞாலத் திருக்குறளை உரிய தமிழ் வாயிலாகக் கற்க முயலுமின்! முயலுமின்! என்ற உணர்ச்சியைப் பிறமொழி மாந்தர்க்கு ஊட்டலும் நம் பொறுப்பு.

.

- மூதறிஞர் வ.சுப.மாணிக்கனார்

திருக்குறள் ஒரு தனித்தமிழ் நூலாகும். திருக்குறள் அயற்கொள்கை எதிர்ப்பு நூலேயன்றி எந்த ஓர் அயற் கொள்கையையும் உடன்பட்டுக் கூறும் நூல் அன்று, 'தமிழர் வாழ்வே திருக்குறள். திருக்குறளே தமிழர் வாழ்வு' என்னும் அவ்வளவு இன்றியமையாச் சிறப்பினையுடைய நூல் திருக்குறள். -திருவள்ளுவர் செய்த திருக்குறள்

தீங்கனியாகிய ஒரு மாம்பழத்தைப் பிழிந்தால் எவ்வளவு சாறு தேறும்? தேறும் சிறு அளவிற்றாய சாற்றினைச் சுண்டக் காய்ச்சிக் கற்கண்டு சேர்த்துத் துண்டாக்கினால் ஒக்க, திரண்ட

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_10.pdf/323&oldid=1579949" இலிருந்து மீள்விக்கப்பட்டது