உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 10.pdf/324

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னிணைப்பு

299

காப்பியங்களை யெல்லாம் பிழிந்து வடித்துக் காய்ச்சித் திரட்டிய தீந்தமிழ்ச் சாற்றுக் கட்டியே திருக்குறள்.

- மறைமலையடிகளார்

தெய்வப் புலமைத் திருவள்ளுவ நாயனார் மக்கள் உய்யத் திருவாய் மலர்ந்தருளிய தமிழ்மறை, உலகிருள் அகற்ற வந்த ஒற்றைத் தனியாழிப் பரிதி என்னின்; ‘மனத்துக் கண் மாசிலனாதல் அனைத்தறன்' என்னும் குறட்பா அவ்வாழியின் அச்சாணி எனத்தக்க அருமை உடையதாதல் கண்டு உணர்ந்து உளங்கொளற் பாற்று.

- நாகை சொ.தண்டபாணியார்

வள்ளுவர் குறள் தமிழில் தனிமுதல் அறநூலே.

- நாவலர் பாரதியார்

உலகப் பெருஞ்சான்றோர்கள் உரைப்பன

திருக்குறளைப் பற்றிச் சில செம்மொழிகள் உங்கள் வரவேற்பில் மிளிர்கின்றன. இருபது ஆண்டுகளுக்கு முன்னரே யான் தமிழ் பயிலத் தொடங்கியதற்குக் காரணம் திருக்குறள் மூலத்தையே நேராகப் படித்தல் வேண்டும் என்று என் உள்ளத்தில் எழுந்த ஆர்வமேயாம்.

- காந்தியடிகளார்

வள்ளுவர் தம் குறளில் எளிய உயரிய வாழ்க்கையை இயல்பாகச் சிந்தித்துள்ளார். மாந்தன் தனக்குத்தானே செய்து கொள்ள வேண்டிய கடமைகள் உலகத்திற்குச் செய்ய வேண்டிய கடமைகள் முதலிய பலதரப்பட்ட கேள்விகளுக்கு வள்ளுவர் தரும் விடைகள் பெருந்தன்மை யுடையன; அறிவுக்குப் பொருந்துவன. இத்தகைய உயரிய அறிவு நிறை முதுமொழிகளை உலக இலக்கியங்கள் எவற்றினும் காண இயலாது.

ஆல்பர்ட்டு சுவைட்சர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_10.pdf/324&oldid=1579950" இலிருந்து மீள்விக்கப்பட்டது