உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 10.pdf/325

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

300

மறைமலையம் 10

6

திருக்குறளை நன்றாய்க் கற்பவர்களுக்கு வேறு கல்வி வேண்டியது இல்லை என்பது என் துணிவு. பேரறிஞர் மெக்காலே பிரபுவின் புத்தகக் களஞ்சியம் முழுவதையும் விட இவ்வியப்புக் குரிய நூல் ஒன்று மட்டும் சாலச் சிறந்தது என்றும், மாந்தர் இனத்திற்கு மிக நன்மை பயக்கக் கூடியது என்றும் எண்ணு கின்றேன்.

தமிழர்களாகிய நாம் நம்முடைய பழந்தமிழ் நாகரிகத்தை எல்லாம் இழந்து வருவதாகப் பகர்கிறோம். பொருநை காவிரி முதலிய ஆறுகளையோ திருக்கோயில்களையோ அரண்மனை களையோ பிற வளங்களையோ இழக்க நேர்ந்தாலும் திருக்குறளை இழக்க மாட்டோம்.

- எம். எசு. மைக்கேல்

ஒரு பிரிவினர்க்கே உரிய கோட்பாடுகளைக் கொள்ளாது விலக்கி, உலகமக்கள் அனைவருக்கும் ஒருங்கே பொருந்தும் உண்மைகளையே தெரிந்தெடுத்துத் திருவள்ளுவர் மொழிந் துள்ளார்.இவ்விரிந்த உணர்வால் மற்றை மனு முதலிய நூல்களில் கூறப்பெறும் கண்மூடித்தனம் எதுவும் இன்றி நூல் மேலோங்கித் திகழ்கின்றது.

-

அறிஞர் துறு

இன்பத்துப்பாலை அனைவரும் குற்றமற்ற முறையில் படித்து இன்புறுமாறு எழுதப்பட்டிருத்தல் பாராட்டத்தக்கது. -போப் ஐயர்

திருக்குறள் அமைப்பு வகையாலும் பாவகையாலும் வட மொழித் தொடர்பு சிறிதும் இல்லாமல் தனித்தியங்கும் தனிப் பெருமையுடையது.

இராபர்ட்டு கால்டுவெல்

திருக்குறள் மேலும் விரித்துரைக்க இயலாத கட்டுத்திட் அமைப்புடையது. அது சீரிய பளிங்குக் கல்பரப்பு. அதன் ஒரு சிறு கல்லின் அமைப்பிலோ வடிவிலோ வண்ணத்திலோ சிறியதொரு மாற்றம் செய்தாலும் அப்பரப்பின் முழுதுறு அழகும் பழுதுறும். குறள் தூய செந்தமிழால் இயன்றதொரு நூல். நல்லொழுக்கமே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_10.pdf/325&oldid=1579951" இலிருந்து மீள்விக்கப்பட்டது