உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 10.pdf/326

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* பின்னிணைப்பு

301

விளை நிலமாய் அமைந்த ஒரு நாட்டிலன்றி இத்தகைய நூல் தோன்றாது.

முனைவர் இலாசரசு

திருக்குறள் வழங்கும் செவ்விய இன்பம் இத்தகையது என்று எந்த மொழி பெயர்ப்பாலும் ஒரு சிறிதாயினும் கொடுக்க இயலாது. திருக்குறள் உண்மையாகவே வெள்ளியால் செய்யப் பெற்ற எழிற்பேழையில் இட்டு வைக்கப் பெற்ற பொன் ஆப்பில் பழம் போன்றது ஆகும்.

-

முனைவர் கிரௌல்

ஒருநாள் வழக்கப்படி திருக்குறள் படித்தபோது 'தாமின் புறுவதுலகின் புறக்கண்டு காமுறுவர் கற்றறிந்தார்' எனக் குறள் ஒன்று தென்பட்டது. அதைப் பார்த்துத் தமிழர்கள் திருக்குறளைப் படித்துச் சுவைப்பது போல் உருசியக்காரர்களும் படித்துச் சுவைக்குமாறு ஏற்பாடு செய்யலாமா என்று நினைத்துக் கொண்டேன்.

- எம். அந்திரோனவ்

று

திருக்குறளை ஓதி உணர்ந்தால் அல்லது தமிழறிந்தவன் என்று கூறிக்கொள்ள முடியாது.

எவனும்

-பிரடெரிக்கு பின்காட்டு

வள்ளுவத்தின் வான்புகழ்

தால்சுதாய் 1906இல் 'இந்து ஒருவருக்கு எழுதப்படும் கடிதம்’ என்பதை எழுதியுள்ளார். அதில் திருக்குறளை 'இந்துக்களின் குறள்' என்கிறார். அதில் தம் உள்ளத்தைப் பெரிதும் கவர்ந்த திருக்குறட்பாக்கள் சிலவற்றை மேற்கோளாகக் காட்டியுள்ளார். அவை இன்னா செய்யாமை என்னும் அதிகாரத்தில் உள்ள குறட்பாக்கள் ஆகும். குறட்பாக்களைக் குறிப்பிடுவதுடன் விளக்கவுரையும் வரைகின்றார். க்குறட் பாக்கள் தால்சுதாயின் இன்னா செய்யாமை (அகிம்சை)க்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_10.pdf/326&oldid=1579952" இலிருந்து மீள்விக்கப்பட்டது