உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 10.pdf/327

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

302

கொள்கையை

மறைமலையம் - 10

உருவாக்க உதவியுள்ளன. அறநெறியில் போராடுவதைப் பற்றிய அவருடைய சிந்தனைக்கு உரமாக அமைந்தன. தால்சுதாயின் இக்கடிதத்தினால்தான் காந்தியடிகள் திருக்குறளை அறிந்து கொண்டு, ஏரியல் என்பார் மொழி பெயர்த்த பிரெஞ்சு மொழி பெயர்ப்பு நூலைப் படித்து அதன் சிறப்புணர்ந்தார்.

"உறங்குவது போலும் சாக்கா டுறங்கி விழிப்பது போலும் பிறப்பு”

66

(குறள் 339)

என்னும் குறளைக் காட்டி தைவிடத் தெளிவாக இறப்பைப் பற்றிக் கூற இயலுமா?” என வினாவுகிறார்.

இங்கர்சால் என்னும் பகுத்தறிவாளர் திருக்குறளிடத்துப் பேரீடுபாடு கொண்டு இருந்தார். திருவள்ளுவருடைய கட்டற்ற சிந்தனைப் போக்கும், அறிவை முதன்மையாகப் போற்றும் பண்பும் இங்கர்சாலின் உள்ளத்தைப் பெரிதும் கவர்ந்தன.

66

"அறிவு அற்றம் காக்கும் கருவி”

(குறள். 321)

“எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்ப தறிவு.

(குறள். 453)

“எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்ப தறிவு.”

(குறள். 424)

என்னும் குறட்பாக்களை இங்கர்சால்

அடிக்கடி

மேற்கோளாகக் காட்டி எழுதியும் பேசியும் வந்துள்ளார்.

- சான்றோர் கண்ட திருவள்ளுவர்

"இருநோக் கிவளுண்கண் உள்ள தொருநோக்கு நோய்நோக்கு ஒன்றந்நோய் மருந்து”

என்னும் பாடலைச் செருமானிய அறிஞர் கால் கிரௌல் என்பவர் அறிந்தார். அதன் பொருள் ஆழத்திலும் கலை அழகிலும் ஈடுபட்டுத் திருக்குறளை முழுமையாகக் கற்றார். பின்னர் 1754இல் செருமானிய மொழியிலும் 1856இல் இலத்தீன் மொழியிலும் திருக்குறளை மொழி பெயர்த்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_10.pdf/327&oldid=1579953" இலிருந்து மீள்விக்கப்பட்டது